Jyothika: யங் ஹீரோயின் எல்லாம் ஓரமா போங்க.. வேறமாதிரி லுக்கிற்கு மாறிய ஜோதிகா.. வெறித்தனம்!

சென்னை: வாரணம் ஆயிரம் படத்தில் கடுமையாக வொர்க்கவுட் செய்து ரசிகர்களை நடிகர் சூர்யா அசரடித்த நிலையில், சமீப காலமாக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து சின்ன பொண்ணாகவே மாறி வருகிறார் நடிகை ஜோதிகா.

சென்னை திநகரில் அப்பா சிவகுமார் உடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சூர்யா தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மும்பைக்கு ஷிஃப்ட் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா அதிரடியாக வொர்க்கவுட் செய்வதை பார்த்தால் மீண்டும் தனது இடத்தை சினிமாவில் பிடித்து விடுவார் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வெறித்தனமான வொர்க்கவுட்: நடிகை ஜோதிகா வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் லேட்டஸ்ட் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு தீபிகா படுகோன் முதல் கீர்த்தி சுரேஷ் வரை வீடியோ மற்றும் போட்டோ வெளியிட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை நடிகை ஜோதிகா வெளியிட்டு வெயிட்டுக் காட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் இருந்து வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்ற நிலையில், சினிமாவுக்கு சின்னதாக பிரேக் விட்டு இருந்தார். ஆனால், குழந்தைகள் கொஞ்சம் வளர ஆரம்பித்ததுமே மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா மெச்சூரிட்டியான ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மும்பையில் செட்டில்: நடிகர் சூர்யா தமிழில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் பங்களா வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார் சூர்யா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சூர்யா மும்பையில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி டிரெண்டாகின. ஜோதிகா பிறந்து வளர்ந்ததே மும்பையில் தான் என்பதால், மேலும், ஜோதிகாவின் குடும்பத்தினர் மும்பையில் உள்ள நிலையில், அவர்கள் அருகே போய் செட்டில் ஆகி விட்டனர் என பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

தலைகீழாக வொர்க்கவுட்: இளம் நடிகைகளே இப்படியெல்லாம் வொர்க்கவுட் செய்வார்களா என்பது சந்தேகம் தான் என்கிற அளவுக்கு தலைகீழாக வொர்க்கவுட் செய்வது, ஹெவி வெயிட் எல்லாம் தூக்கி ஸ்குவாட் போடுவது என தாறுமாறாக உடற்பயிற்சியை செய்து வருகிறார் ஜோதிகா.

 Jyothika done heavy workout and totally changed her body shape

ஆளே மாறிட்டார்: குஷி படத்தில் பார்த்தது போல ஜோதிகாவின் உடல் தோற்றமே மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வாவ் என்றும் ஓ மை காட் ஜோதிகாவா இது என கமெண்ட் போட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா கூடிய விரைவிலேயே பல படங்களில் கமிட் ஆவார் என்றும் கூறுகின்றனர்.

அதற்காகவே தன்னை இப்படி தயார்ப்படுத்தி வருகிறார் ஜோதிகா என்றும் சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் கணக்கை ஜோதிகா தொடங்கவும் அதுபோன்ற திட்டங்களுடன் தான் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பழையபடி ஜோதிகாவை ஸ்க்ரீனில் பார்த்தால் ரசிகர்கள் வேறலெவலில் ஹேப்பி ஆகிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X