சூர்யாவை ஒரு நாள் மட்டும் எனக்கு தருவீங்களா.. ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் பதில் என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ஜோதிகாவை ரசிகை ஒருவர் செம டென்ஷனாக்கி உள்ளார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் லீடு ரோலில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பெரிதாக தனக்கு ஸ்கோப் இல்லை என்பதால் மலையாளம், இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மம்மூட்டியுடன் ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தில் கணவர் தன்னுடன் உறவு கொள்வதில்லை என்றும் அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற போராடும் கதாபாத்திரத்தில் செம போல்டாக ஜோதிகா நடித்திருப்பார்.

Jyothika epic reply to a girl fan who asking to borrow Suriya one day

150 கோடி வசூல்: அந்த படம் ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில், தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த ஷைத்தான் திரைப்படம் வெளியானது. அதில், மாதவன் பிளாக் மேஜிக் செய்யும் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். பிரியமான தோழி, டும் டும் டும் படங்களுக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஜோதிகாவுடன் மாதவன் நடித்து இருந்தார். பாக்ஸ் ஆபிஸில் அதிரடியாக இதுவரை 150 கோடி வசூலை அந்த படம் கடந்துள்ளது என்கின்றனர். 200 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் சூர்யாவை தருவீங்களா?: சினிமாவில் எந்தளவுக்கு பிசியாக இருந்தாலும் சூர்யா படங்களுக்கு ஜோதிகா துணையாகவும் ஜோதிகா படங்களுக்கு சூர்யா துணையாகவும் இருந்து வருகின்றனர். குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ்ட்டாக மெயின்டெயின் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகை ஒருவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுடன் சூர்யாவை ஒரு நாள் அனுப்பி வைப்பீர்களே, நான் சூர்யாவை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஒரு நாள் மட்டும் என்னுடன் அனுப்பி வைப்பீங்களா என அசால்ட்டாக கேட்டுள்ளார். அந்த ரசிகையின் கமெண்ட்டை கடந்து போகாமல் ஜோதிகா கொடுத்துள்ள பதில் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Jyothika epic reply to a girl fan who asking to borrow Suriya one day

ஜோதிகா என்ன சொன்னார்?: தர்ஷிணி சூர்யா எனும் அந்த ரசிகைக்கு நடிகை ஜோதிகா "Oops not allowed" என அதற்கெல்லாம் அனுமதிக்க முடியாது என கமெண்ட் போட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும், சில்லுனு ஒரு காதல் படத்தில் ஒரு பெண் சூர்யாவை பார்த்து ஜொள்ளு விட ஜோதிகா போய் வெளுக்கும் காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

சில்லுனு ஒரு காதல்: கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, பூமிகா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவும் பூமிகாவும் காதலித்து இருப்பார்கள். சூர்யா பூமிகாவை காதலித்ததால் குந்தவையாக நடித்த ஜோதிகா அனுப்பி வைத்திருப்பார். அப்போது கூட அவர் பயப்படும் காட்சிகள் தான் படமாக்கி இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு நிஜத்திலும் அப்படி கேட்டால் ஜோதிகா சும்மா விடுவாரா என ரசிகர்கள் ரவுண்டு கட்டி அந்த ரசிகையை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக டப்பா கார்ட்டெல் எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. சூர்யாவின் கங்குவா டீசர் அதிக வியூஸ்களை அள்ளி டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X