Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
21 நாட்கள் புது வாழ்க்கை... ஜோதிகா -சூர்யாவின் வேற லெவல் பிராக்டீஸ்
சென்னை : நடிகர் சூர்யா -ஜோதிகா இருவரும் கோலிவுட்டில் மனமொத்த தம்பதிகளாக விளங்கி வருகின்றனர்.
இவர்கள், தனித்தனியாக தங்களது கேரியரை சிறப்பாக எடுத்து சென்று வருகின்றனர்.
2டி என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி சிறப்பான பல படங்களை தந்து வருகின்றனர்.
பளீச்சென குட்டை டவுசரில் படகில் என்ஜாய் செய்த டிடி...வைரலாகும் ஃபோட்டோஸ்

வெற்றிகரமான தம்பதி
நடிகர் சூர்யா -ஜோதிகா இருவரும் கோலிவுட்டின் சிறப்பான தம்பதிகளாக மட்டுமின்றி வெற்றிகரமான தம்பதிகளாகவும் காணப்படுகின்றனர். இருவரும் தங்களது கேரியரை சிறப்பாக கொண்டு செல்கின்றனர். திருமணம், குழந்தைகள் என்று சில காலங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

உடன்பிறப்பே படம்
சமீபத்தில் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இவரது நடிப்பில் வெளியான உடன்பிறப்பே படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது. தன்னுடைய மேம்பட்ட நடிப்பை இந்தப் படத்தில் ஜோதிகா வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெய் பீம் படம்
இதேபோல சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ஜெய் பீம் படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. படம் ஐஎம்டிபியில் முதலிடத்தை பெற்றது. படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் கேரக்டரை ஏற்று சூர்யா நடித்திருந்தார்.

சிறப்பான சொந்த வாழ்க்கை
தங்களுடைய திரைப்பயணத்தை சிறப்பாக அமைத்துவரும் இந்த ஜோடி, சொந்த வாழ்க்கையிலும் சிறப்பாக காணப்படுகின்றனர். அவ்வப்போது இவர்களின் சிறப்பான படங்களை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இவர்களது குழந்தைகளின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது.

வைரலான புகைப்படங்கள்
இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் கடற்கரையில் வாக்கிங் போவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்தப் படங்கள் அவர்களது விடுமுறைக் கொண்டாட்ட படங்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படங்கள் ஆயுர்வேத மற்றும் யோகா நிலையத்தின் புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.

வாழ்க்கை முறை மாற்றம்
தற்போது இதன் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஜோதிகா, 3000 ஆண்டுகள் பழமையான இந்தக் கலையை அனைவரும் தங்களது வாழ்க்கையில் சேர்த்து வாழ்க்கை முறையை மாற்றி சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய அனுபவம்
21 நாட்கள் இந்த இடத்தில் இருந்ததாகவும் இந்த அனுபவத்தை தங்களது வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மனம், உடல் அனைத்தும் சேர்ந்துதான் சிறப்பான வாழ்க்கையை அளிக்கும் என்பதை இந்த இடம் உணர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சிறப்பான மேஜிக்
மேலும் ஆயுர்வேதம் மற்றும் யோகாவை வாழ்க்கையில் இணைந்து சிறப்பான வாழ்க்கையை வாழ முற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மேஜிக்கை நமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.