பாலிவுட் போனதும் ஆளே மாறிட்டாங்க... 47 வயதில் கொள்ளை அழகு!
சென்னை: திருமணத்திற்கு பிறகு 37 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தவர் ஜோதிகா. அதனை தொடர்ந்து சோலாே ஹீரோயினாக அசத்தி வருகிறார். இந்நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வயசு ஆனாலும் அழகு கூடுதே தவிற குறையவில்லை என நெட்டிசன்கள் ஜொல்லு விடுகின்றனர்.
காதல் திருமணம்: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து 2006ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர்கள் சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஜோதிகா தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு பிறகு நடிகைகள் நடிப்பது கடினமாக இருக்கும் சூழலில், ஜோதிகாவிற்கு சூர்யா சப்போர்ட்டாக இருந்து வருகிறார். சூர்யா - ஜோதிகா ஜோடியை பார்த்து புகழ்ந்து பேசாதவர்களே இல்லை.

திருமணம் செய்தது ஏன்?: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகராக இருந்தாலும் சிறந்த கணவராகவும் இருக்கிறார். எவ்வளவு கோபமாக இருந்தாலும் அவரது கண்களை பார்த்தால் அனைத்தும் மறந்து விடும். அவர் கண்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறிய வீடியோ சமீபத்தில் வைரலானது. ஜோதிகா கூறுவதை போல் சூர்யா விழா மேடைகளில் தனது மனைவி பற்றி பேசாமல் இருந்தது இல்லை. ஜோதிகா கொடுக்கும் தைரியம் தான் இந்த அளவுக்கு நன்றாக நடிக்க முடிகிறது என அவரே தெரிவித்தார்.
சோலோ ஹீரோயின்: 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'காற்றின் மொழி', காதல் தி கோர் ஆகிய 2 படங்கள் ஜோதிகாவின் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக உள்ளது.மலையாளத்தில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்ற படமாக உள்ளது. மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருந்தாலும் ஜோதிகாவின் நடிப்பு பிரமிக்கும் வகையில் இருந்தன. இதைதொடர்ந்து ஜாக்பாட், ராட்சசி, உடன்பிறப்பு போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த படமாக இருந்தது.
பிட்னஸ் குயின் ஜோதிகா: பாலிவுட் பக்கம் திரும்பியுள்ள ஜோதிகா தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக சைத்தான் என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. பிடனஸில் சூர்யாவை மிஞ்சும் அளவிற்கு அவரது உடற்பயிற்சி வீடியோக்கள் வலைதளத்தில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் 47 வயதிலும் ஜோதிகா முப்பது வயது பெண் போல் இளமையுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வைரல் புகைப்படம்: டப்பா கார்டெல் என்ற வெப் தொடர் போதை மருந்து கடத்தல் கும்பலை பற்றிய கதையாக உள்ளது, இதில், ஜோதிகா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் விழா நடைபெற்றது, இதில்,ஜோதிகா மாடர்ன் உடையில் அசத்தலாக வந்திருந்தார். அப்போது அவர் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலிவுட் போனதும் ஆளே மாறிட்டாங்க என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











