Jyothika NetWorth: ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா... சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டாத ஜோ, இப்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், இன்று தனது 45வது பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகாவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

செகண்ட் ஹீரோயினாக அறிமுகமாகி முன்னணி நடிகையான ஜோதிகாவின் சொத்து மதிப்பு பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜோதிகாவின் சொத்து மதிப்பு
தமிழில் தனித்துவமான நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. மும்பையில் இருந்து கோலிவுட்டில் இறக்குமதியான ஜோ, பின்னர் தமிழ்நாட்டு மருமகளாகவே மாறிப்போனார். தமிழில் டாப் ஹீரோவான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, முதலில் செகண்ட் ஹீரோயினாக தான் அறிமுகமானார்.
பிரியதர்ஷன் இயக்கிய 'டோலி சஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் தான் ஜோதிகா முதலில் அறிமுகமானார். தமிழில் அஜித்தின் வாலி படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். எஸ்ஜே சூர்யா இயக்கிய இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஜோதிகா செகண்ட் ஹீரோயினாக அறிமுகமானாலும் அடுத்து சூர்யவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகியானார்.
தொடர்ந்து அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். சந்திரமுகி ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சூர்யாவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகா, இறுதியில் அவரையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார். சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகா பெரிய சப்போர்ட்டாக இருந்தது திரையுலகமே அறிந்தது தான்.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்பில் இருந்து சற்று விலகியே இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் பிஸியாகிவிட்டார். தற்போது மம்முட்டியுடன் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஜோதிகா. இதனையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
செகண்ட் ஹீரோயினான கோலிவுட்டில் என்ட்ரியான ஜோதிகா, டாப் ஹீரோவான சூர்யாவை திருமணமும் செய்துகொண்டார். அதேபோல், சொத்து மதிப்பிலும் டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்துள்ளார். இப்போதும் ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம் ஜோ. அதுமட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு கோடிகளில் வருமானம் கிடைக்கிறது.

அதன்படி ஆண்டுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம் ஜோதிகா. நடிப்பது தவிர 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் சூர்யாவுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் ஜோதிகா, அதன் மூலமாகவும் கோடிகளில் சம்பாதித்து வருகிறார். சென்னையில் 20000 சதுர அடியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ள ஜோதிகா, மும்பையில் 70 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றும் வாங்கியுள்ளார்.
அதேபோல், ஆடி, BMW போன்ற சொகுசு கார்களும் ஜோதிகாவின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளன. அதன்படி ஒட்டுமொத்தமாக இதுவரை 330 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளார் ஜோதிகா. இவரது சொத்து மதிப்பே 330 கோடி என்றால், சூர்யாவின் சொத்து மதிப்பு பற்றி கேட்கவா வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











