Jackpot Trailer: '100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா..' செம மாஸா ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ டிரெய்லர்!
ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜோதிகா, ரேவதி நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர்அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜாக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ஜாக்பாட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரே செம தூளாக இருக்கிறது. எல்லோருக்கும் பிடித்த துறுதுறு, குறும்புக்கார ஜோதிகாவை இதில் பார்க்க முடிகிறது. ரேவதியுடன் சேர்ந்து ஜோதிகா செய்யும் ரகளைகள் டிரெய்லரிலேயே துள்ளலாக உள்ளது.

'நான் 100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா' என பஞ்ச் பேசி கெத்து காட்டுகிறார் ஜோதிகா. திடீரென சந்திரமுகியாக மாறி தெறிக்கவிடுகிறார். யோகி பாபு, மன்சூர்அலிகான், ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரின் காமெடியும் ஒர்க்கவுட் ஆகும் எனத் தெரிகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











