ஜோதிகா நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதானா? குஷியில் ரசிகர்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஜோதிகா அடுத்த பட டைட்டில், ' உங்கள் ஜோ'- வீடியோ

சென்னை : சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்து மிகவும் தெளிவாக படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படம் விமர்சனங்களை தாண்டி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

அடுத்து ஜோதிகா, 'தும்ஹாரி சுலு' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'உங்கள் ஜோ' என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரீமேக் படத்தில்

ரீமேக் படத்தில்

தற்போது ஜோதிகா, வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தி படமான 'தும்ஹாரி' சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் இறுதியில் என்று கூறப்படுகிறது.

வித்யா பாலன் நடித்த ரோல்

வித்யா பாலன் நடித்த ரோல்

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் தும்ஹாரி சுலு தமிழில் ரீமேக்காகிறது. வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

உங்கள் ஜோ

உங்கள் ஜோ

ஆர்.ஜே-வாக இப்படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. தற்போது இப்படத்திற்கு படக்குழு 'உங்கள் ஜோ' என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பை கேட்ட ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

'நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் ஜோதிகா, அந்தப் படத்தை முடித்ததும் ஏப்ரல் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

மேலும் ஜோதிகாவின் சம்பளமும் அடுத்தடுத்த படங்களில் உயர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X