மீண்டும் ஜோதிகா - சூர்யா கூட்டணி... ஆனால் நீங்க எதிர்பார்த்த மாதிரி கிடையாது!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Recommended Video

சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா அடுத்த படம்- வீடியோ

சென்னை: சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காற்றின் மொழி'. ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Jyothika’s next movie

இந்நிலையில், கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் ஜோதிகா. இப்படத்தை சூர்யாவின் 2டி தயாரிக்கிறது. இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் காமெடி கதைக்களத்தில் உருவாவதாகக் கூறப்படுகிறது. கல்யாண், பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கியவர் ஆவார்.

இப்படம் தவிர, ஜோதிகா, டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிவருகிறார். மேலும் இதில், பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரீஸ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் நடித்துவருகின்றனர். இப்படத்திற்காக ஜோதிகா சிலம்பம் கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X