அமேசான் பிரைமில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்..' இந்த தேதியில்தான் ரிலீஸ் ஆகுதாமே.. புது தகவல்!
சென்னை: ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் எப்போது வெளியாகிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Recommended Video
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.
இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகிய 5 டைரக்டர்கள் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைம்
இந்த 5 பேரில் ஒருவர் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில், இதன் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 17-ம் தேதி நடக்கவிருந்தது. கொரோனா வைரஸ் காரணத்தால், அது ரத்தானது. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.9 கோடிக்கு வாங்கியது.

கடும் எதிர்ப்பு
இதையடுத்து இந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி சூர்யா தொடர்பான படங்கள் அனைத்தையும் டிஜிட்டலிலே வெளியிட்டுக் கொள்ளட்டும், திரையரங்க உரிமையாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து லாக்டவுன் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் தவிர மேலும் சில படங்களும் நேரடியாக ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியிடப்பட இருக்கின்றன.

ரம்ஜான் பண்டிகை
இந்நிலையில், ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை அன்று இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதாவது வரும் 25 ஆம் தேதி இந்தப் படம் அமேசானில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











