47 வயசிலும் செம்ம ஸ்டைல்.. ஜோதிகா அணிந்த ‘பிளேயர் ஜீன்ஸ்’ விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகை ஜோதிகா தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை விட இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்தி வருகிறார். அந்த வகையில் அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் ஆகியோர் நடித்த சிஸ்டம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதன் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜோதிகா அணிந்து இருந்த 'பிளீயர் ஜீன்ஸ் பேன்ட்' தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகை ஜோதிகா: 47 வயதான ஜோதிகா முதல் படத்தில் பார்த்தது போல, அதே அழகுடனும் அழகாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் தனது திரைப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி கணவர் சூர்யா, மகன் தேவ், மகள் தியாவுடன் ஸ்டைலிஷ் அவுட்ஃபிட்டில் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜோதிகா அணிந்திருந்த அந்த ஜீன்ஸ், இந்தியாவின் பிரபலமான பிராண்டான Label Jen நிறுவனத்தின் Feral Fair Denim Jeans ஆகும். 100% லினன் காடன் ஃபேப்ரிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீன்ஸ், பயன்படுத்த மிகவும் கம்ஃபர்டபிளாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

பேன்ட் என்ன விலை தெரியுமா?: இந்த ஜீன்சை எந்த டாப்புடன் அணிந்தாலும் ஸ்ட்ரீட் ஃபேஷன் லுக்கை தரும் இந்த ஜீன்ஸ் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஜீன்ஸின் விலை சுமார் 2000 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில் இருந்த ஜோதிகா தனது மகளின் படிப்புக்காக மும்பையில் செட்டில் ஆனார். இதனால், சிவகுமார் குடும்பத்திற்கும் ஜோதிகாவிற்கும் பிரச்சனை என சொல்லப்பட்டது. மும்பையில் இருக்கும் ஜோதிகாவின் நடிப்பில் கடந்த ஆண்டுஷைத்தான்,ஸ்ரீகாந்த் மற்றும் 'டப்பா கார்ட்டல்' என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். தற்போது ஜோதிகா "சிஸ்டம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அஸ்வினி திவாரி இயக்கி இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் நேற்று வெளியானது. அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக சூரியாவுடன் சென்றபோதுதான் இந்த ஜீன்ஸை அவர் அணிந்திருந்தார்.


Click it and Unblock the Notifications