உடன்பிறப்பே ஃபர்ஸ்ட் சிங்கிள் "அண்ணே யாரண்ணே" வெளியானது!
சென்னை : ஜோதிகாவின் நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உடன்பிறப்பே திரைப்படம் உருவாகியுள்ளது.
கத்துக்குட்டி பட
இயக்குனர் இரா. சரவணன் இப்படத்தை இயக்கி இருக்க நேரடியாக ஓடிடியில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் உடன்பிறப்பே படத்திலிருந்து முதல் சிங்கிள் "அண்ணே யாரண்ணே" தற்பொழுது வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

அண்ணன்-தங்கை பாசத்தை
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வரும் நடிகை ஜோதிகா இப்பொழுது உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி இருக்க அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஜோதிகாவுக்கு அண்ணனாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

முரட்டுத்தனமான அண்ணன்
முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள உடன்பிறப்பே படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஜோதிகாவுக்கு கணவராக நடித்துள்ளார். எதற்கும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் தப்பை தட்டிக் கேட்கும் முரட்டுத்தனமான அண்ணன் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடித்துள்ளார் .

இக்கட்டான சூழ்நிலையில்
சமுத்திரக்கனிக்கும் சசிகுமாருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் சண்டை ஏற்படுகிறது இதனால் உறவில் விரிசல் ஏற்பட
ஜோதிகா அண்ணனுக்கு ஆதரவாக இருப்பதாக கணவருக்கு ஆதரவாக இருப்பதால் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார். உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் பாசப் போராட்டத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகி இருக்க வரும் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.

முதல் சிங்கிள்
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே உடன்பிறப்பே படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. "அண்ணே யாரண்ணே" எனத் தொடங்கும் இந்த பாடல் அண்ணன் தங்கை பாசத்தை பற்றியதாக இருக்க பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

அண்ணே யாரண்ணே
பாடகி ஸ்ரேயா கோஷல் இப்பாடலை பாடி உள்ளார். ஜோதிகாவின் அபார நடிப்பில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உடன்பிறப்பே படத்தை காண அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்க இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் "அண்ணே யாரண்ணே" என்ற பாடல் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











