Vijay - விஜய்யுடன் நடிப்பது Comfartable இல்லை என்றாரா ஜோதிகா?.. அய்யோ இது என்ன புது பஞ்சாயத்து

சென்னை: Jyothika (ஜோதிகா) நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீப நாட்களாக பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில், விஜய்யுடன் நடிப்பது அவ்வளவு Comfartable கிடையாது என ஜோதிகா சொன்னார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன. அதை மீறி வென்றவர்களும் உண்டு; அந்தத் தொல்லை காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியவர்களும் உண்டு. இதனை தடுப்பதற்கு சினிமாவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தாலும் இன்னும் அது ஒழிந்தபாடில்லை.

Jyothika said acting with Vijay is not comfortable Says Journalist Bismi

ஆபாச பேச்சு: சமீபத்தில்கூட மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சு பெரும் எதிர்ப்பை சந்தித்தது. அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரோ தான் பேசியது சரிதான் தன்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று ஓபனாகவே பேசினார். அவரது இந்த அலட்சிய போக்கும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசித்திரா: அதேபோல் நடிகை விசித்திரா சினிமாவில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார். அவரது பேச்சை அடுத்து விசித்திராவை படுக்கைக்கு அழைத்த ஹீரோ பாலகிருஷ்ணாதான் என்று நெட்டிசன்ஸ் உறுதியாக கூறிவருகின்றனர். அதேபோல் மனிஷா யாதவ்வும் இயக்குநர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்ததாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் நடிகைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியின் நெறியாளர் பிஸ்மியிடம், 'சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. அதில் ஜோதிகாவிடம், நீங்கள் யாருடன் நடிக்கும்போது Comfartableஆக ஃபீல் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவரோ மாதவன், சூர்யா, அஜித் என சொல்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

பிஸ்மி பதில்: அதற்கு பதிலளித்த பிஸ்மி, "ஜோதிகா சொன்னதிலிருந்து நீங்களே புரிந்துகொள்ள வேண்டியதுதான். அவர் இதுவரை எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் என்ற லிஸ்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த மூன்று பேரை தவிர்த்து ஜோதிகாவுடன் நடித்தவர்கள் அவரிடம் அத்துமீறி, தவறாக நடந்துகொள்ள முயன்றார்கள் என்றுதான் நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

குஷி படத்தில் விஜய்யுடன் ஜோதிகா நடித்தார். எனவே அவரது இந்தக் கூற்றில் குற்றவாளியாக்கப்படுவது விஜய்யும்தான். இதை நாம் பகுத்து பிரித்து பார்ப்பதால் விஜய்யை பற்றி இப்படி சொல்கிறார்களே என நம் மீது அவரது ரசிகர்களுக்கு கோபம் வரும். ஆனால் அவர்கள் ஜோதிகா மிதுதான் கோபப்பட வேண்டும். ஏனென்றால் இந்த மூன்று பேர்தான் தனக்கு கம்ஃபர்டபிள் என்று அவர் சொல்கிறார். எனில் மற்றவர்கள் ஜோதிகாவிடம் எதோ செய்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்" என்றார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த கடந்த சில நாட்களாகவே பேச்சுக்கள் தொடர்ந்து தலை தூக்கியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் நடிகர்களில் கம்ஃபர்ட் என்றால் மாதவன், சூர்யா, அஜித்தான் என்று சொல்லியிருக்கிறார் ஜோதிகா. இந்த லிஸ்ட்டில் அவர் விஜய்யை சேர்க்காததால் பல எண்ணங்கள் எழுகின்றன என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X