தம்பி படம் ரெடி.. கையோடு ஜோ.வின் அடுத்த படத்துக்கு பூஜை போட்ட சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா?
ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜோதிகா, சசிகுமார் சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம். அடுத்ததாக இந்நிறுவனம் ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்கிறது.

அப்படத்தின் பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று நடத்தப்பட்டது. அதில், நடிகர்சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை டி. இமான்.
இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் ஜோதிகாவும், கார்த்தியும் முதல்முறையாக சேர்ந்து நடித்துள்ள தம்பி படம் ரிலீசாக இருக்கிறது. அப்படத்தில் ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











