கங்குவா முதல் அரைமணி நேரம் சுத்தமாக சரியில்லை.. ஜோதிகாவின் விமர்சனம்.. ஷாக்கான ரசிகர்கள்

சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருந்தது கங்குவா. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். சிவா இயக்க சூர்யா ஹீரோவாகவும், திஷா பதானி ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். அனிமல் பட வில்லன் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் ஜோதிகா கங்குவா படம் குறித்து பேசியிருக்கிறார்.

சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார் சிவா. கங்குவாவுக்கு முன்னதாக அவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மூலம் அவர் தரமான கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் சூர்யாவுக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

suriya jyothika kanguva

ஓவர் பேச்சு: படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அந்த எதிர்பார்ப்பை இமயமலை உயரம் கொண்டு சென்றார். தான் அளித்த ஒரு பேட்டியில், 'இந்தப் படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும். அதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்' என்றும்; 'கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்த பிறகு இரண்டாம் பாகத்துடன் எந்தப் படத்தையும் போட்டிக்கு களமிறக்கமாட்டார்கள்' என்றெல்லாம் கூறினார். அதுமட்டுமின்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே சக்சஸ் மீட் பற்றியும் பேசினார்.

சூர்யாவின் பங்கு: ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஞானவேல், 'கங்குவா படத்தின் சக்சஸ் மீட் டிசம்பர் மாதத்தில் நடக்கும். உலக அளவில் விநியோகஸ்தர்களை அழைத்து அந்த சக்சஸ் மீட் நடத்தப்படும். இந்த ஆடியோ வெளியீட்டு விழா பாஸை வைத்துக்கொண்டே அதற்கும் நீங்கள் வரலாம்' என்று பேசினார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ப்ரோமோஷனில் பேசிய சூர்யா, 'கங்குவா படத்தை பார்க்கும்போது அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள்' என்று கொளுத்திப்போட்டார்.

படுத்துவிட்ட பாக்ஸ் ஆஃபிஸ்: படம் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. மேக்கிங், திரைக்கதை, இசை என எதுவுமே தேறவில்லை என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட கங்குவா இதுவரை வசூலில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் நடிகையும், சூர்யாவின் மனைவியும் ஜோதிகா கங்குவா படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஜோதிகாவின் கருத்து: அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இதனை சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.

மூன்று மணி நேரம்: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.

கங்குவா பாசிட்டிவ்: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X