ஜோதிகா முதல் மீனாட்சி சவுத்ரி வரை.. விஜய்யுடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்த டாப் நடிகைகள்!

சென்னை: ஹாலிவுட் படங்களில் அசால்ட்டாக வரும் லிப் லாக் முத்தக் காட்சிகள் பாலிவுட் படங்களிலும் அதிகம் பெருகி விட்டன. ஆனால், தமிழ் படங்களில் அளவாகத்தான் லிப் லாக் முத்தக் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவில் முத்தக் காட்சிகளில் நடிக்காத நடிகைகள் கூட தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கும் போது தாராளமாக லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கிவிடுவார்கள்.

தமிழ் சினிமாவில் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு துடைப்பது போன்ற காட்சிகளில் ரஜினிகாந்த் சந்திரமுகி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பார். கமல்ஹாசன் தான் முத்த காட்சிகளுக்கு ஸ்பெஷல் என்றே ரசிகர்கள் சொல்வார்கள்.

vijay goat lip lock

ஆனால், நடிகர் விஜய்யை குஷி படத்தில் எஸ்.ஜே. சூர்யா அப்படி நடிக்க வைத்ததை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இப்படியொரு லிப் லாக் சீனா என இன்றளவும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து விஜய் தனது படங்களில் லிப் லாக் காட்சிகளை வைத்து வரும் நிலையில், அவருடன் இணைந்து லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ள நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஜோதிகாவுடன் லிப் லாக்: 2001ம் ஆண்டு விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான குஷி படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்தார். அதற்கு முன் வரை லிப் லாக் காட்சிகளில் நடிக்காத விஜய் குஷி படத்தில் ஜோதிகாவுடன் லிப் லாக் அடித்து நடித்தது தமிழ் சினிமா ரசிகர்களையே ஷாக் ஆக்கியது. இடுப்ப பார்த்தியா இல்லையான்னு ஆரம்பத்தில் பெரிய பஞ்சாயத்து வைக்கும் ஜோதிகா கடைசியில் அப்படியொரு லிப் லாக் காட்சியில் நடித்து இருப்பார்.

vijay goat lip lock

இலியானாவுடன் லிப் லாக்: குஷி படத்திற்கு பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜய் லிப் லாக் முத்தக் காட்சிகளை பெரிதும் தவிர்த்து வந்தார். பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தை ஷங்கர் இயக்கிய நிலையில், அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இலியானாவுடன் லிப் லாக் காட்சியில் விஜய் நடித்திருப்பார். இந்தியில் அமீர் கான் மற்றும் கரீனா கபூர் இடையே லிப் லாக் காட்சி இடம்பெற்ற நிலையில், அந்த காட்சியை இங்கேயும் வைத்திருப்பார்கள்.

vijay goat lip lock

த்ரிஷாவுடன் லிப் லாக்: கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என த்ரிஷாவுடன் இணைந்து நடித்த போது லிப் லாக் காட்சி இடம்பெறவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் தாறுமாறான லிப் லாக் காட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்திருப்பார். அந்த காட்சியை தொடர்ந்து ஏகப்பட்ட கிசுகிசுக்களும் விமர்சனங்களும் குவிந்தன.

vijay goat lip lock

கோட் படத்திலும் இருக்கு: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக காட்டப்படும் மீனாட்சி சவுத்ரிக்கு விஜய் லிப் லாக் அடிக்கும் காட்சியையும் வெங்கட் பிரபு வைத்துள்ளார். அடுத்து எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள நிலையில், அடுத்த படத்தின் ஹீரோயினுடனும் லிப் லாக் காட்சியில் விஜய் நடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

vijay goat lip lock

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X