தூற்றியவரெல்லாம் போற்றட்டும்.. குறை சொல்ல மட்டுமல்ல நிறை செய்யவும் தெரியும் #Jyothika

சென்னை: குறை சொல்ல மட்டுமின்றி, அந்த குறையை நிறை செய்யவும் நடிகை ஜோதிகாவுக்குத் தெரியும் என்று #Jyothika என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

தஞ்சை கோயிலுக்கு எதிரே உள்ள மருத்துவமனை சீரழிந்து கிடக்கும் நிலையில் இருப்பதாக பேசி இருந்த ஜோதிகாவுக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையே வெடித்தது.

இந்நிலையில், தற்போது அந்த மருத்துவமனையை சீர் செய்ய 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் ஜோதிகா என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

25 லட்சம்

25 லட்சம்

தஞ்சை அரசு ராசா மிரசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வரும் இரா. சரவணன் மூலமாக இந்த தொகையை கொடுத்துள்ளார். மேலும், புத்துணர்வு பெற்றுள்ள அந்த அரசு மருத்துவமனை மற்றும் அதன் அருகே கட்டப்பட்டுள்ள அகரம் பூங்காவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ரியல் ஹீரோயின்

ரியல் ஹீரோயின்

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஜோதிகா. ஒரு ஊரில் கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அங்கிருக்கும் மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் கொடுக்க வேண்டும் என்பதை சொன்ன குற்றத்திற்காக தூற்றப்பட்ட நடிகை ஜோதிகாவை, தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவிளையாடல் மீம்

திருவிளையாடல் மீம்

அகரம் அறக்கட்டளையை அமைத்து நடிகர் சூர்யா கல்வி சேவைகளை செய்து வருகிறார். உழவன் அறக்கட்டளையை அமைத்து நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இந்நிலையில், தற்போது மருத்துவமனையை தூய்மைப் படுத்தி உள்ள ஜோதிகாவை வைத்து திருவிளையாடல் பட மீமை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். கல்விக்கு சூர்யா, விவசாயத்துக்கு கார்த்தி, மருத்துவத்துக்கு ஜோதிகா என அமர்களப்படுத்து கின்றனர்.

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே

துணிச்சலான கருத்தை பொதுவெளியில் பேச தயங்காமல் இருந்தும், அதன் விளைவாக எழுந்த சர்ச்சையை கண்டு பயந்து ஓடாமல், குறை சொல்ல மட்டும் தனக்குத் தெரியாது, அதனை நிறை செய்து காட்டுகிறேன் என எழுந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த நடிகை ஜோதிகா தான் ரியல் சிங்கப்பெண் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதில் என்ன ஆச்சர்யம்

இதில் என்ன ஆச்சர்யம்

நடிகை ஜோதிகாவின் ரசிகர் ஒருவர், மருத்துவமனையை சீர் செய்ய 25 லட்சம் ரூபாய் கொடுத்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கு? அவர் நடிக்க வந்த முதல் நாளில் இருந்தே உதவும் மனப்பான்மையை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தானே என்று, நடிகை ஜோதிகாவின் புகைப்படங்களை பதிவிட்டு செம ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X