சூர்யா-ஜோதிகா அடுத்த மாதம் டும்..டும்..? வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஜோதிகாவை சூர்யா மணமுடிப்பார் என்று தெரிய வருகிறது.இதையடுத்து, தான் ஒப்புக் கொண்ட சில படங்களில் இருந்து ஜோதிகா விலக ஆரம்பித்துள்ளார்.வஸந்த் மூலம் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜோடியான சூர்யாவும், ஜோதிகாவும் மிகவேகமாகவே காதலில் விழுந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவருமே காதலித்து வருகின்றனர்.ஆனால், இதை சூர்யா மறுத்ததில்லை. ஜோதிகா சில முறை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து 5 படங்களில்சேர்ந்து நடித்த இந்த ஜோடி மீண்டும் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தில் ஜோடி சேர திட்டமிட்டிருந்தது. அந்தப் படத்தைசூர்யாவின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க இருந்தார்.இந் நிலையில் இருவரும் மணமுடிக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. தமிழில் ஜூன்-6 என்ற படத்தில் நடித்து வரும்ஜோதிகா (இதில் ஜோதிகா கேட்டுக் கொண்டதால் ஒரு சிறிய காட்சியில் சூர்யா தலை காட்டுகிறார்), கமலுடன் வேட்டையாடுவிளையாடு படம் தவிர மற்ற எந்தப் படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை.சந்திரமுகிக்குப் பின் 20க்கும் மேற்பட்ட படங்கள் ஜோதிகாவைத் தேடி வந்தபோதும் யாருக்கும் ஓகே சொல்லாமல் இருந்தார்.ஆனால், தெலுங்கில் இரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். தெலுங்கு முன்னணி ஸ்டாரான நாகர்ஜூனாவுடன்ஜோதிகா ஜோடி சேர இருந்த படம் ஸ்ரீராமதாசு. மேலும் இன்னொரு முன்னணி நட்சத்திரமான வெங்கடேசுடன் லட்சுமி என்றபடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் ஜோதிகா.அடுத்த மாதம் தொடங்க இருந்த இந்த இரு தெலுங்கு படங்களில் இருந்தும் ஜோதிகா திடீரென விலகிக் கொண்டுவிட்டார்.இரு தயாரிப்பாளர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோதிகா தன்னால் அந்தப் படங்களில் நடிக்க முடியாதுஎன்று கூறிவிட்டதாகவும், அட்வான்ஸையும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறுகிறார்கள்.இதையடுத்து ஜோதிகாவுக்குப் பதிலாக ஸ்னேகாவை நாகர்ஜூனாவுக்கு புக் செய்திருக்கிறார்கள். வெங்கடேசுக்கும் வேறுஹீரோயின் பார்த்துக் கொண்டுள்ளனர்.மிக மிக முக்கியமான காரணம் இருந்தால் தவிர தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களை ஜோதிகா வேண்டாம் என்றுகூறியிருக்க மாட்டார் என்பதால், அது குறித்து தீவிரமாக விசாரித்தபோது தான் திருமண விஷயம் தெரியவந்தது.இந் நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.ஜோதிகா விஷயத்தில் சில வாரங்களுக்கு முன்பே கமல் தரப்புக்கு சந்தேகம் வந்துவிட்டதால் அவருக்குப் பதிலாகநயனதாராவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.ஜோதிகாவுடனான காதலுக்கு சூர்யாவின் வீட்டில் இருந்த எதிர்ப்பு, குறிப்பாக அப்பா சிவக்குமாரின் எதிர்ப்பு, நீங்கிவிட்டதாகத்தெரிகிறது. இதையடுத்து விரைவில் ஜோதிகாவைக் கைப்பிடிக்க இருக்கிறார் சூர்யா.சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த விருதை ஜோதிகாவுக்கு அர்ப்பணம் செய்தார்சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் சேர்ந்து மிக பிரமாண்டமான ஒரு அபார்ட்மெண்டை வாங்கிப் போட்டுஅதை அழகுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

By Staff

வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஜோதிகாவை சூர்யா மணமுடிப்பார் என்று தெரிய வருகிறது.

இதையடுத்து, தான் ஒப்புக் கொண்ட சில படங்களில் இருந்து ஜோதிகா விலக ஆரம்பித்துள்ளார்.

வஸந்த் மூலம் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜோடியான சூர்யாவும், ஜோதிகாவும் மிகவேகமாகவே காதலில் விழுந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவருமே காதலித்து வருகின்றனர்.

ஆனால், இதை சூர்யா மறுத்ததில்லை. ஜோதிகா சில முறை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து 5 படங்களில்சேர்ந்து நடித்த இந்த ஜோடி மீண்டும் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தில் ஜோடி சேர திட்டமிட்டிருந்தது. அந்தப் படத்தைசூர்யாவின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க இருந்தார்.


இந் நிலையில் இருவரும் மணமுடிக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. தமிழில் ஜூன்-6 என்ற படத்தில் நடித்து வரும்ஜோதிகா (இதில் ஜோதிகா கேட்டுக் கொண்டதால் ஒரு சிறிய காட்சியில் சூர்யா தலை காட்டுகிறார்), கமலுடன் வேட்டையாடுவிளையாடு படம் தவிர மற்ற எந்தப் படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

சந்திரமுகிக்குப் பின் 20க்கும் மேற்பட்ட படங்கள் ஜோதிகாவைத் தேடி வந்தபோதும் யாருக்கும் ஓகே சொல்லாமல் இருந்தார்.

ஆனால், தெலுங்கில் இரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். தெலுங்கு முன்னணி ஸ்டாரான நாகர்ஜூனாவுடன்ஜோதிகா ஜோடி சேர இருந்த படம் ஸ்ரீராமதாசு. மேலும் இன்னொரு முன்னணி நட்சத்திரமான வெங்கடேசுடன் லட்சுமி என்றபடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் ஜோதிகா.

அடுத்த மாதம் தொடங்க இருந்த இந்த இரு தெலுங்கு படங்களில் இருந்தும் ஜோதிகா திடீரென விலகிக் கொண்டுவிட்டார்.

இரு தயாரிப்பாளர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோதிகா தன்னால் அந்தப் படங்களில் நடிக்க முடியாதுஎன்று கூறிவிட்டதாகவும், அட்வான்ஸையும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து ஜோதிகாவுக்குப் பதிலாக ஸ்னேகாவை நாகர்ஜூனாவுக்கு புக் செய்திருக்கிறார்கள். வெங்கடேசுக்கும் வேறுஹீரோயின் பார்த்துக் கொண்டுள்ளனர்.

மிக மிக முக்கியமான காரணம் இருந்தால் தவிர தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களை ஜோதிகா வேண்டாம் என்றுகூறியிருக்க மாட்டார் என்பதால், அது குறித்து தீவிரமாக விசாரித்தபோது தான் திருமண விஷயம் தெரியவந்தது.

இந் நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.ஜோதிகா விஷயத்தில் சில வாரங்களுக்கு முன்பே கமல் தரப்புக்கு சந்தேகம் வந்துவிட்டதால் அவருக்குப் பதிலாகநயனதாராவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.


ஜோதிகாவுடனான காதலுக்கு சூர்யாவின் வீட்டில் இருந்த எதிர்ப்பு, குறிப்பாக அப்பா சிவக்குமாரின் எதிர்ப்பு, நீங்கிவிட்டதாகத்தெரிகிறது. இதையடுத்து விரைவில் ஜோதிகாவைக் கைப்பிடிக்க இருக்கிறார் சூர்யா.

சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த விருதை ஜோதிகாவுக்கு அர்ப்பணம் செய்தார்சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் சேர்ந்து மிக பிரமாண்டமான ஒரு அபார்ட்மெண்டை வாங்கிப் போட்டுஅதை அழகுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X