சூர்யா குடும்பத்தில் என்னதான் நடக்குது?.. ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் வராத ஜோதிகா

சென்னை: சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ரெட்ரோ திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தை 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. சூர்யா ஒரு படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. கடைசியாக வெளியான கங்குவா திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ரெட்ரோ திரைப்படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் சூர்யா. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராக எளிதாக மாறிவிடக்கூடியவர். இதன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. கமர்ஷியல் நடிகராக மட்டுமின்றி தனது நடிப்புக்கு தீனி போடும்வகையில் இருக்கும் கதைகளிலும் அஞ்சாமல் நடித்து தனது திறமையை நிரூபித்தவர் அவர். மேலும் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya Jyothika Retro

ஹிட் கொடுத்து நீண்ட காலம்: சூர்யா கடைசியாக ஜெய் பீம் படத்தைதான் ஹிட் படமாக கொடுத்தார். அதற்கு பிறகு அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியடைந்தது. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்தார். படம் வெளியாவதற்கு முன்னதாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் சம்பாதித்தது. மேலும் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் தங்களது பேச்சின் மூலம் படத்தின் மீதான ஹைப்பை உச்சக்கட்டமாக ஏற்றிவிட்டனர்.

படம் படுதோல்வி: அந்த ஹைப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். ஆனால் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும், சூர்யா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் பேசிய அளவுக்கும் படத்தில் ஒன்றுமே இல்லை. இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று ஓபனாக விமர்சனமும், ட்ரோலும் செய்தார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பலத்த அடி வாங்கியது.முக்கியமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இந்தப் படத்தில் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

ரெட்ரோ சூர்யா: கங்குவா கொடுத்த அடியால் சூர்யா ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் என்பதால் கங்குவாவில் வாங்கிய அடிக்கு இந்தப் படத்தில் மருந்திட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழா: இந்தப் படமானது மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் நேற்று படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும்; கண்டிப்பாக பந்தயம் அடிக்கக்கூடிய அத்தனை அறிகுறிகளும் தென்படுவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சூர்யா குடும்பத்தில் என்ன நடக்குது?: இந்நிலையில் நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா வரவில்லை. ஏற்கனவே கங்குவா படத்தின் விழாவுக்கும் அவர் வரவில்லை. தற்போது ரெட்ரோ விழாவுக்கும் அவர் வராததன் காரணமாக; ஜோதிகாவுக்கும், சூர்யாவின் குடும்பத்தினருக்கும் மோதல் என்று கடந்த சில காலமாக வரும் தகவல் அத்தனையும் உண்மைதானோ; ரெட்ரோ படத்தை தயாரித்திருப்பது 2டி நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஜோதிகாதான் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் ஏன் வரவில்லை; சூர்யாவின் குடும்பத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கேள்விகள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X