Shaitaan: 25 வருஷம் கழித்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஜோதிகா.. முதல் படமே 100 கோடி வசூல்!

மும்பை: இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான "ஷைத்தான்" திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வேட்டையை நடத்திய நிலையில், அதிரடியாக 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்த ஆண்டு கத்ரீனா கைஃப், விஜய்சேதுபதி நடித்து வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ், ரோபோட்டோகா க்ரித்தி சனோன் நடித்த 'Teri Baaton Mein Aisa Uljha Jiya' உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

Jyothika s Shaitaan joins prestigious 100 crore club within a week

ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபைட்டர் திரைப்படம் பீஸ்ட் படம் அளவுக்கு கூட ஓடாமல் உதை வாங்கியது.

25 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா: மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா முதன் முதலில் அறிமுகமானதே இந்தி படத்தில் தான். Doli Saja Ke Rakhna எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழில் அஜித்தின் வாலி படத்தில் நடித்த நிலையில், தமிழ் சினிமாவில் லீடு ஹீரோயினாக மாறினார். மீண்டும் மும்பைக்கு சென்றுள்ள ஜோதிகா 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஷைத்தான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மும்பையில் வீடு: ஜோதிகாவின் பெற்றோர்கள், அக்கா நக்மா உள்ளிட்டோர் மும்பையில் வசித்து வரும் நிலையில், மும்பையிலேயே தனியாக பல கோடிகளுக்கு வீடு ஒன்றை வாங்கிக் கொண்டு தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். அதே சமயம் இந்தி படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

ஷைத்தான் கதை: விக்ரம் பால் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் திரைப்ப்டம் பிளாக் மேஜிக்கை வைத்து உருவாக்கப்பட்ட பேய் படமாக வெளியான நிலையில், ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று அந்த படத்தை பார்த்து வருகின்றனர். காமெடி பேய் படமாக இல்லாமல் நிஜ ஹாரர் த்ரில்லராக வெளியாகி மிரட்டி வருகிறது ஷைத்தான்.

Jyothika s Shaitaan joins prestigious 100 crore club within a week

முதல் நாள் வசூல்: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. மேலும், மாதவன் வனராஜா எனும் கதாபாத்திரத்தில் ரியல் ஷைத்தானாக மிரட்டிய நிலையில், அந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தனர்.

சூர்யா ஹேப்பி: தரன் ஆதர்ஷ் ஷைத்தான் படத்துக்கு அதிக ரேட்டிங் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்தும் ஜோதிகா பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள படத்துக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளதே என சூர்யா தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

100 கோடி வசூல்: மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான ஷைத்தான் திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய் தான். ஒரே வாரத்தில் ஷைத்தான் திரைப்படம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டி படக்குழுவினரை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே லாபகரமான படமாக ஷைத்தான் தான் மாறியிருக்கிறது. 200 முதல் 300 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X