பாலிவுட்டில் அதிரடி காட்டிய ஜோதிகா.. ரூ 200 கோடி வசூலை தாண்டிய ஷைத்தான்!

சென்னை: ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் இந்தியில் மார்ச் 8ந் தேதி வெளியானத் திரைப்படம் ஷைத்தான். இப்படத்தில், அஜய் தேவ்கன், மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சிம்பு, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

Jyothika s Shaitaan Total box Office Collection

ஷைத்தான்: இதையடுத்து தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த இவர், 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியில் ஷைத்தான் என்ற படத்தில் நடித்துள்ளார் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவான இப்படத்தில் ஜோதிகா அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். குஜராத்தி மொழியில் உருவான வாஷ் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த சைத்தான் திரைப்படம் ஆகும்.

பின்னணி என்ன: அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா இருவரும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தோடு பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில், எதிர்பாராத விதமாக மாதவனுடன் நட்பு ஏற்படுகிறது, அப்போது, மாதவன் கொடுக்கும் லட்டை வாங்கி சாப்பிட்ட மகள், மாதவன் எது சொன்னாலும் சூனியம் வைத்தது போல அதற்கு கட்டுப்பட்டு செய்கிறாள். இதன் பின் என்ன ஆனது? மாதவன் யார்? என்பது தான் ஷைத்தான் திரைப்படத்தின் கதை.

Jyothika s Shaitaan Total box Office Collection

படத்தின் மொத்த வசூல்: மார்ச் 8ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளிலேயே 5.05 கோடியை வசூலித்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்து, 11 நாட்களில் ரூ145 கோடியாக இருந்தது. இதையடுத்து ஷைத்தான் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் ரூ .200 கோடி ரூபாய்யைத் தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.201.73 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X