twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி.. ஜோதிகாவுக்கு குவியும் பாராட்டு !

    |

    சென்னை : தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா தன்னுடைய சார்பில் 25 லட்சம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார்.

    Recommended Video

    ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக தஞ்சை மருத்துவமனைக்கு சென்ற நடிகை ஜோதிகா அங்கு மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் இல்லாமலும், மருத்துவமனையைச் சுற்றி பாம்புகள் உள்ளிட்ட பல விஷத்தன்மை கொண்டவைகள் உள்ளதையும் பார்த்து அதிர்ந்து போனார்.

    இவ்வாறு சரியான பராமரிப்பு இன்றி கிடக்கும் தஞ்சை மருத்துவமனையில் தான் கண்டதை பற்றி ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசிய உரை ஒன்று சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்பொழுது அந்த மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் இடம் நிதியுதவியாக அளித்துள்ளார்.

    சொன்னேன்ல.. கொரோனாவை முறியடிப்பேன்னு.. ஒருவழியாக குணமான அபிஷேக் பச்சன்.. உற்சாக ட்வீட்!சொன்னேன்ல.. கொரோனாவை முறியடிப்பேன்னு.. ஒருவழியாக குணமான அபிஷேக் பச்சன்.. உற்சாக ட்வீட்!

    சீரமைப்புக்கான தொகை

    சீரமைப்புக்கான தொகை

    நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.

    அகரம் அறக்கட்டளை மூலம்

    அகரம் அறக்கட்டளை மூலம்

    தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு. மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

     தஞ்சாவூர் சென்றிருந்தபோது

    தஞ்சாவூர் சென்றிருந்தபோது

    சில மாதங்களுக்கு முன்பு சசிகுமார் மற்றும் ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.

    அரசின் சார்பில் நன்றி

    அரசின் சார்பில் நன்றி

    ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். "ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி" என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

    ஜோதிகாவின் மனமார்ந்த நன்றி

    ஜோதிகாவின் மனமார்ந்த நன்றி

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த்ராவ், "ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்" என்றார். "தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா அவர்களின் உதவி சரியான முன் உதாரணம்." என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு.மருது துரை. மேலும் இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் மாண்புமிகு திரு.துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சர்ச்சை வெடித்தது

    சர்ச்சை வெடித்தது

    சரியான பராமரிப்பு இன்றி கிடக்கும் தஞ்சை மருத்துவமனையில் பாம்புகள் உள்ளிட்ட பல விஷத்தன்மை கொண்டவைகள் உள்ளதை நேரில் பார்த்த நடிகை ஜோதிகா, அந்த மருத்துவமனையில் தான் கண்டதை பற்றி ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய உரை ஒன்று சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    மக்களால் பாராட்டப்பட்டுள்ளது

    மக்களால் பாராட்டப்பட்டுள்ளது

    இந்நிலையில், தற்பொழுது அந்த மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் இடம் நிதியுதவியாக அளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தற்பொழுது மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

    English summary
    Jyotika donates Rs 25 lakh to Thanjavur Government Hospital
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X