ப்பா.. ஜோதிகாவா இது.. புது ஹேர்ஸ்டைலில் செம க்யூட்டா மாறிட்டாரே.. அடுத்த படத்திற்கு ரெடியா?

சென்னை: நடிகை ஜோதிகாவின் புது ஹேர்ஸ்டைல் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ், மலையாளம் என செம பிசியாக இப்போதும் சினிமாவில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

1998ம் ஆண்டு வெளியான தோலி சஜா கே ரக்னா எனும் இந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. 1999ம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு பெரிய பிரேக் விட்டு இருந்த நிலையில், மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி தொடர்ந்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து லீடு ரோலில்

தொடர்ந்து லீடு ரோலில்

நடிகர் சூர்யாவுடன் திருமணம் ஆன நிலையில், கடைசியாக பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் மணிகண்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதன் பின்னர், நடிப்புக்கு முழுக்கு போட்டு குழந்தைகளை கவனிக்கத் தொடங்கினார். 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து லீடு ரோலில் நடித்து வருகிறார்.

காதல் படத்தில்

காதல் படத்தில்

பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே என சமீபத்தில் தமிழில் ஜோதிகாவின் படங்கள் வெளியான நிலையில், அடுத்து மம்மூட்டியுடன் மலையாளத்தில் காதல் படத்தில் நடித்து வரும் ஜோதிகா பாலிவுட்டில் ஸ்ரீ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

புது ஹேர்ஸ்டைல்

புது ஹேர்ஸ்டைல்

சூர்யா மட்டும் தான் கெட்டப் சேஞ்ச் பண்ணுவாரா, நானும் பண்றேன் பாருங்க என தற்போது தனது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக கட் செய்து முன்னாடி முடி வந்து விழும் அளவுக்கு செம க்யூட்டான தனது லேட்டஸ்ட் லுக்கை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை ஜோதிகா. அவரது புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அடுத்த படத்திற்கா

அடுத்த படத்திற்கா

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என மீண்டும் பிசியான நடிகையாக மாறி உள்ள ஜோதிகாவின் இந்த லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்கான லுக்கா என கமெண்ட் போட்டு வருகின்றனர். 44 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை ஜோதிகா.

பிரித்விராஜ் வீட்டுக்கு

பிரித்விராஜ் வீட்டுக்கு

சமீபத்தில் கணவர் சூர்யாவுடன் மலையாள நடிகர் பிரித்விராஜ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துடன் செலவழித்த அழகான தருணங்களை போட்டோ போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். கணவர் சூர்யாவுடன் சமீபத்தில் சாகசங்கள் நிறைந்த டூர் சென்ற போட்டோக்களும் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X