“இது என் ஸ்கூல்லு”.. கல்வி அரசியல் பேசும் ‘ராட்சசி’.. கெத்து காட்டும் ஜோதிகா!

ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரெய்லர் வைரலாகியுள்ளது.

Recommended Video

ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரெய்லர் பற்றிய பார்வை

சென்னை: ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் ரிலீசாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் நேற்று வெளியானது.

அதில் உள்ள காட்சிகள் மூலம், ஜோதிகா ஆசிரியையாக நடிப்பது தெரிய வந்துள்ளது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் கீதா ராணி. கல்வித்துறை மற்றும் பள்ளிகளில் நடைபெறும் அவலங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது.

ரசிகர்கள் பாராட்டு:

ரசிகர்கள் பாராட்டு:

இந்த டிரெய்லரை இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். ஜோதிகாவின் நடிப்பு கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ராட்சசன் படம் பள்ளிக் குழந்தைகளைக் கொல்வது போல் இருந்தது, ராட்சசி அவர்களைக் காப்பாற்றுகிறார் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

சாட்டை சாயல்:

சாட்டை சாயல்:

டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சாட்டை படத்தை சற்று நமக்கு நினைவூட்டுகிறது. அப்படத்தில் வருவது போலவே, மோசமான நிலையில் உள்ள பள்ளி, அதனை திருத்த நினைக்கும் ஆசிரியர், அவருக்கு வலுக்கும் எதிர்ப்புகள் என்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன.

பெண் சமுத்திரக்கனி:

பெண் சமுத்திரக்கனி:

இதனாலேயே ஜோதிகாவை பெண் சமுத்திரக்கனி என ரசிகர்கள் இந்த டிரெய்லருக்குப் பின் அழைக்கத் தொடங்கி விட்டனர். ராட்சசி படத்தையும் சாட்டையின் இரண்டாம் பாகமா என அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், சாட்டையில் சமுத்திரக்கனி மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ஜோதிகா அப்படியில்லை.

கல்வி அரசியல்:

கல்வி அரசியல்:

‘இது என்னோட ஏரியா' என தன்னை மிரட்டும் அரசியல்வாதியை, ‘இது என் ஸ்கூல்லு' என பதிலுக்கு மிரட்டும் காட்சியில் கம்பீரமாக மிளிர்கிறார். கல்வி அரசியலைப் பேசும் இப்படத்தில் வசனங்கள் எல்லாம் பேசும்படி இருக்கும் எனத் தெரிகிறது.

ஷான் ரோல்டன் இசை:

இப்படத்தில் ஜோதிகாவுடன், சத்யன், அருள்தாஸ், பூர்ணிமா பாக்யராஜ், கவிதா பாரதி, ஹரிஷ் பரேடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்ள பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X