Jyotika - விஜய் படத்தில் வேண்டுமென்றேதான் அப்படி செய்தேன் - ஜோதிகா ஓபன் டாக்

சென்னை: Jyotika (ஜோதிகா) விஜய் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வாலி படத்தை முடித்துவிட்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய முதல் படமான வாலி மெகா ஹிட்டாகியிருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டராக வலம் வர ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியதன் மூலம் மேலும் கவனம் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

Jyotika Shares her experience about Kushi Movie

சிம்ப்பிள் லைன்: ஆனால் மேஜிக்: குஷி படம் சாதாரண காதல் கதைதான் என்றாலும் அதில் எஸ்.ஜே.சூர்யா செய்திருந்தது மேஜிக்கின் உச்சம். குறிப்பாக படத்தின் டைட்டில் கார்டிலேயே கதையை சொல்லி கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ரசிகர்களை தனது திரைக்கதை மூலமும், மேக்கிங் மூலமும் நகரவிடாமல் வைத்திருந்ததை வைத்து புரிந்துகொள்ளலாம் எஸ்.ஜே.சூர்யா எவ்வளவு பெரிய இயக்குநர் என்று. 2000ஆம் ஆண்டு வெளியான அந்தப் படமும் மெகா ஹிட்டானது.

அசத்திய விஜய், ஜோதிகா: குஷி படத்தில் என்ன இருந்தது அதில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என இயக்குநர் விக்ரமனே விஜய்யிடம் கேட்டிருக்கிறார். இருப்பினும் எஸ்.ஜே.சூர்யா எனும் ஒற்றை ஆளை நம்பி படத்தில் நடித்தார் விஜய். அவரது கரியர் பெஸ்ட் படங்களில் குஷியும் ஒன்று. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஜய்யின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். விஜய் எந்த அளவு நடித்தாரோ அதே அளவு ஜோதிகாவும் பின்னி பெடலெடுத்திருப்பார்.

Jyotika Shares her experience about Kushi Movie

ஈகோ புடிச்ச கழுத: காதலர்களுக்குள் நடக்கும் ஈகோவை வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு காட்சியிலும் ஈகோவை கொப்பளிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதை கனகச்சிதமாக செய்திருந்தார் ஜோதிகா. விஜய்யுடன் சண்டை போடுவது, மும்தாஜுடன் விஜய் நெருக்கம் காட்டும்போது உள்ளுக்குள் பொறுமுவது என தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றார் அவர். அதேசமயம் குஷி படத்தில் ஜோதிகா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

விளக்கமளித்த ஜோதிகா: இந்நிலையில் குஷி படத்தில் நடித்தது குறித்து ஜோதிகா பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "படத்தின் கதை பற்றி இயக்குநர் சொல்லும்போது பழைய காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும் என்றார். ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள். ஆனால் குஷியில் வேண்டுமென்றே அது கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்து செய்தேன்.

Jyotika Shares her experience about Kushi Movie

பலர் சொல்லியிருக்கிறார்கள்: இதுகுறித்து பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாகவே நினைக்கிறேன். முகவரி போன்ற மற்ற படங்களில் அப்படி நடிக்கவில்லை. தமிழ் எனக்கு அந்த அளவிற்கு தெரியாததால் அதை பேலன்ஸ் செய்வதற்கு என்பதால் சில சமயங்களில் நான் ஓவர் ஆக்டிங் செய்து நடித்திருப்பேன்.

ஒரு நடிகையாக நான் சரியாக செய்கிறேனா இல்லையா என்பது தெரியாததால் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முயற்சிப்பதுண்டு. ஆனால் ரசிகர்கள் அதை விரும்புவதாலும் எனது அதிர்ஷ்டத்தாலும் அது நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X