சூர்யா - ஜோதிகாவை உச்சி குளிரவைத்த மகள் தியா.. புள்ள என்னமா பாடுபட்டிருக்கு.. குவியும் பாராட்டு!

மும்பை: நடிகார் சூர்யா - நடிகை தம்பதியரின் மகள் தியா. இவர் சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த ஆவணப் படத்திற்கு, ” Leading Light - The Untold Stories Of Behind The Scenes” என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஜோதிகா, மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா. இவர் குறித்து இதற்கு முன்னர் ஊடகங்களில் பல க்யூட்டான செய்திகள் வெளியாகியிருக்கும். அப்படி இருக்கும்போது தற்போது இவர் தொடர்பாக வெளிவந்துள்ள செய்தி இதற்கு முன்னர் வெளிவந்த செய்திகளின் வரிசையில் சேரவே சேராது. காரணம், சினிமா குடும்பத்தில் பிறந்த தியாவுக்கு சினிமா ஆர்வம் இல்லாமல் இருக்குமா? அதேநேரத்தில் சூர்யா, ஜோதிகா போன்ற பெற்றோர்கள் இருக்குபோது, தியாவின் சினிமா ஆசையை மிகச் சரியாக கைகாட்டி பக்கபலமாக இருந்துள்ளனர்.

jyotika suriya jyotika daughter suriya daughter

தியா தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலு இந்த ஆவணப்படம் திரைப்பட விழாவில் விருதும் வென்றுள்ளது. தியா இயக்கியுள்ள லீடிங் லைட் : தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆஃப் விமன் பிஹைண்ட் தி சீன்ஸ் என்ற ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்பேர் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதினையும் வென்றுள்ளார்.

jyotika suriya jyotika daughter suriya daughter

ஜோதிகா: ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் வென்ற பதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அதில் “பொழுதுபோக்கு துறையில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு மாணவியாக அர்த்தமுள்ளா ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக தியா உன்னை நினைத்து பெருமைப்படுகின்றேன். பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்னையை வெளிக்கொண்டுவததற்காக நன்றி. மேலும், இதுபோல் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அதில், தனது மகள் இயக்கியுள்ள ஆவணப்படத்தின் யூடூயூப் லிங்கினையும் பகிர்ந்துள்ளார்.

சூர்யா: இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிவினை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டாக பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் போஸ்ட்டினை ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார். அதேபோல் இந்தப் போஸ்ட்டில் எதிலும் சூர்யாவை ஜோதிகா மென்சன் செய்யவில்லை. இது ரசிகர்களிடயே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தியா இயக்கியுள்ள ஆவணப்படம் மொத்தம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இந்த அவணப்படம் உருவாக்ப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X