Shaitaan Box Office: இந்தியிலும் சொல்லியடிச்ச ஜோதிகா.. ”ஷைத்தான்” முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

மும்பை: விக்ரம் பால் இயக்கத்தில் ஜோதிகா, மாதவன் மற்றும் அதிதேவதை நடிப்பில் வெளியான ”ஷைத்தான்” திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வேட்டையை நடத்தி இருக்கிறது. பேய் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை தியேட்டரில் பயமுறுத்தி வருகிறது.

36 வயதினிலே படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக ஜோதிகா மாறினார். ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தமிழ் சினிமாவை விட்டுவிட்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

Jyotika s Shaitaan Day 1 Box Office collection is a superb start


மும்பையில் குடித்தனம்: ஜோதிகா பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். வாலி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ஜோதிகா தொடர்ந்து காக்க காக்க, பேரழகன், மாயாவி மற்றும் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பல ஆண்டுகள் மாமனார் சிவக்குமார் வீட்டிலேயே தங்கி இருந்த ஜோதிகா, சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கி கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றார்.

பாலிவுட்டில் பிசி: குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு சென்றுள்ளேன் என்றும் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய ஆசை வந்ததால், அங்கே சென்றேன் என சமீபத்திய பேட்டியில் ஜோதிகா கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து பாலிவுட்டில் ஜோதிகா பிஸியாகி வருகிறார். ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக ஷைத்தான் படத்தில் நடித்து அந்த படம் மார்ச் 8-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

விஜய்யுடன் நடிக்க மறுப்பு?: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சினேகாவுக்கு பதிலாக முதலில் ஜோதிகாவைத்தான் படக்குழு அணுகியதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என ஜோதிகா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் ஷைத்தான் படத்தில் இணைந்து நடித்துள்ளார் ஜோதிகா.

ஷைத்தான் முதல் நாள் வசூல்: விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் பிளாக் மேஜிக்கை வைத்து உருவாக்கப்பட்ட படமாக உருவாகியுள்ள நிலையில், படத்தைப் பார்த்த ரசிகர்கள் செம திகிலாக உள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வந்தனர். இந்நிலையில், முதல் நாளில் ஷைத்தான் திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் இந்தியில் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகி இருந்தால், முதல் நாளே 50 கோடி வசூல் செய்திருக்கும் என்கின்றனர்.

200 கோடிக்கு வாய்ப்பு: பாலிவுட்டில் கடைசியாக கார்த்திக் ஆர்யான், கியாரா அத்வானி மற்றும் தபு நடிப்பில் வெளியான Bhool Bhulaiyaa 2 பேய் படம் 200 கோடி வசூல் செய்த நிலையில், அஜய் தேவ்கன் நடித்துள்ள இந்த ஷைத்தான் பேய் படம் 200 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X