பாஜக அண்ணாமலைக்கு அஜித் படத்தைக் கொடுத்த தொண்டர்கள்.. மனுஷனுக்கு பூரிப்பை பார்க்கனுமே.. தல ரசிகரோ

சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இயங்கி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சினிமா துறையில் இருந்து எப்படி கமலஹாசன் களமருகினாரோ அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் களம் வழக்கத்தை விட இன்னும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் மாறி உள்ளது.

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய விஜயை தேர்தல் களத்தில் களமிறங்கி இருப்பதால் திரை உலகத்தில் இருப்பவர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற கேள்வி பொதுவாகவே ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் வலுவான கட்டமைப்புடன் உள்ள திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் நடிகர்களும் திரைப்படங்களையும் பார்க்க முடிகிறது. இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பலரின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

K Annamalai Reacts to Gift Featuring Ajith Kumar Amid Vijay Election Buzz

நடிகர் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள நடவடிக்கைகளால், அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் என பெருவாரியான ரசிகர்கள் விஜய் மீதும் அவரது கட்சி மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் விஜய் களமிறங்கி உள்ளதால், அவருக்கு தொழில் ரீதியாக போட்டியாக இருக்கக்கூடிய அஜித்தின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

அஜித்: விஜய் பிரசாத்துக்கு வரும்போது விஜய் ரசிகர்கள் சிலரே அஜித் மற்றும் விஜய் இணைந்து ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை தயாரித்து விஜய்க்கு அன்பளிப்பாகவோ நினைவு பரிசாகவோ அளித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அஜித், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் அதனால் அவரது ஆதரவு அதிமுகவுக்கு தான் என்று அதிமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். களத்தில் பேச்சுக்கள் இப்படி இருக்கையில் இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தொண்டர்களும் பாஜக தொண்டர்களும் இணைந்து அண்ணாமலையும் அஜித்குமாரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை பரிசாக கொடுத்துள்ளனர்.

K Annamalai Reacts to Gift Featuring Ajith Kumar Amid Vijay Election Buzz

பெரிய தல: தேர்தல் பிரச்சார களத்தில் இப்படியான பரிசை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை இந்த புகைப்படத்தை பார்த்ததும் பூரிப்பில் சிரித்து போனார்.மேலும் இதை அன்பளிப்பாக வழங்கிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் இரண்டு பேருமே AK தான். அவர் பெரிய தல நான் கொஞ்சம் சின்ன AK என்று கூறினார். அண்ணாமலையின் முழு பெயர் அண்ணாமலை குப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X