Delhi Ganesh: பையன் புடிச்சிட்டான்.. எல்லாம் டெக்னாலஜி.. கணேசன் எப்படி டெல்லி கணேஷ் ஆனார் தெரியுமா?

சென்னை: குணசித்திர கதாபாத்திரங்களுக்கு என்றே அளவு எடுத்து செய்த நபராகவே தமிழ் சினிமாவில் அசத்திய டெல்லி கணேஷ் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் காலமானார். உடல்நலக் கோளாறு மற்றும் வயது மூப்புக் காரணமாக அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாயகன் படத்தில் கமல்ஹாசனின் ரைட் ஹேண்டாக நடித்து பிரபலமான டெல்லி கணேஷ் பட்டின பிரவேசம் எனும் படத்தின் மூலம் 1976ம் ஆண்டே தமிழ் சினிமாவில் நடிகராக மாறிவிட்டார்.

delhi ganesh celebrities death tamil cinema

சினிமா, சின்னத்திரை, குறும்படம் என அனைத்து தளங்களிலும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த டெல்லி கணேஷுக்கு ஏன் டெல்லி கணேஷ் என பெயர் வந்தது என்பது குறித்து அவரே த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியது பற்றி இங்கே பார்ப்போம்.

டெல்லி கணேஷ் காலமானார்: 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி திருநெல்வேலியில் பிறந்த டெல்லி கணேஷ் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் சேவை செய்துள்ளார். சிறு வயதிலேயே நன்றாக படித்து வளர்ந்து நாட்டுக்காக சேவை செய்து வந்த டெல்லி கணேஷ் மேடை நாடகங்களில் அதிக ஆர்வத்தை காட்டி வந்த நிலையில், அதன் பின்னர் 1976ம் ஆண்டு பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். 80 வயதான டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக தூக்கத்திலேயே தனது இன்னுயிரை நீத்துள்ளார். அவரது பிரிவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

delhi ganesh celebrities death tamil cinema

400 படங்கள்: தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் அதிகபட்சமாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் டெல்லி கணேஷ். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும், சின்னத்திரை நடிகராகவும் இளம் தலைமுறை இயக்குநர்கள் இயக்கிய குறும்படங்களிலும் நடித்து வந்தவர்.

delhi ganesh celebrities death tamil cinema

டெல்லி கணேஷ் பெயர் காரணம்: இந்திய விமானப்படையில் சேவையாற்றி வந்த கணேசன் டெல்லியில் ஏகப்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பாலசந்தர் அவரை அறிமுகப்படுத்தும் போது சினிமாவுக்காக தனிப் பெயர் ஒன்றை வைத்துக் கொள் என்றார். என்ன பெயர் வைப்பது என்று குழம்பித் தவித்த நிலையில், நீதான் டெல்லியில் அதிக நாடகங்களில் நடிச்சிருக்கியே, டெல்லி கணேஷ் என்றே பெயரை மாற்றிக்கொள் என்றார். அப்படித்தான் என்னுடைய பெயர் மாற்றம் நிகழ்ந்தது. சினிமாவில் எல்லாரும் என்னை டெல்லி கணேஷ் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர் என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X