மாமியார் சாவில் அப்படியொரு பர்ஃபார்மன்ஸ்.. கவின் அம்மாண்ணே கூப்பிடுறாங்க.. பாலசந்தர் மருமகள் பளிச்!

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ள கீதா கைலாசம் இயக்குநர் கே. பாலசந்தரின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் நடிப்பில் இந்த வாரம் வெளியான ஸ்டார் படத்தில் நடிகர் லாலுக்கு மனைவியாகவும் கவினுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.

ஸ்டார் படத்தில் கவினுக்கு அம்மாவாக நடித்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா வாழ்க்கை குறித்தும் ஸ்டார் படத்தில் கவின் மற்றும் லால் உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

K Balachander daughter in law Geetha Kailasam talks about Kavin s Star movie

கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலசந்தர் மருமகள்: இயக்குநர் சிகரம் என தமிழ் சினிமா உள்ளவரை போற்றப்படக்கூடிய கே. பாலசந்தரின் மருமகள் தான் கீதா கைலாசம். கவிதாலயா பிக்சர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வந்தார். சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மனைவியாக இவரை பா. ரஞ்சித் நடிக்க வைத்திருந்தார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றினாலும் நடிகையாக வேண்டும் என நினைக்காத கீதா கைலாசத்துக்கு தற்போது தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

K Balachander daughter in law Geetha Kailasam talks about Kavin s Star movie

அடுத்த சரண்யா பொன்வண்ணன்: தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன் சில வருடங்களுக்கு முன்பாக தொடர்ந்து பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் காமெடியாகவும், சீரியஸாகவும் நடித்து அசத்தி வந்த நிலையில், அவரது இடத்தை கீதா கைலாசம் தற்போது ரீப்ளேஸ் செய்து விட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வடிவேலுவின் மனைவியாக: சார்பட்டா பரம்பரை படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் நடித்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தில் அவரது மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அதன் விளைவாக இந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ஸ்டார் என தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

கவின் அம்மா: ஸ்டார் படத்தில் கவினுக்கு அம்மாவாகவும் மலையாள நடிகர் லாலுக்கு மனைவியாகவும் நடித்துள்ளார் கீதா கைலாசம். அவரது நடிப்பை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். ஹீரோ கவின் மற்றும் மலையாள நடிகர் லால் நடிப்பை விட உங்கள் நடிப்பு பிடித்திருக்கிறது என சிலர் பாராட்டி உள்ளனர் என்றும் கவினுக்கு அடுத்து உங்கள் நடிப்பு தான் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் ரசிகர்கள் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார். சார்பட்டா பரம்பரை மற்றும் மாமன்னன் படங்களின் நடித்த நிலையிலும் யாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஸ்டார் படத்தில் நடித்த நிலையில், தற்போது அனைவரும் கவின் அம்மா என்றே அழைப்பதாக கூறியுள்ளார்.

K Balachander daughter in law Geetha Kailasam talks about Kavin s Star movie

மாமியார் சாவில்: படத்தின் ஆரம்பத்திலிருந்து கீதா கைலாசத்தை அவரது மாமியார் குரல் ஒன்று திட்டிக் கொண்டே இருக்கும். கவினை கீதா கைலாசம் திட்டும்போது எல்லாம் என் ராசாவை ஏன் திட்டுற என் பையனை நீ மயக்கிட்டு வந்தவதானே என குரல் மட்டும் கேட்கும். ஒரு கட்டத்தில் அந்த கதாபாத்திரம் இறந்துவிடும். ஆனால், சாவு வீட்டில் வரும் ஒரு செய்தியை கேட்டு விட்டு லால், கவின், கீதா கைலாசம் என அனைவரும் சந்தோஷம் அடையும் அந்த காட்சியில் கீதா கைலாசம் செம பர்ஃபார்மன்ஸ் பண்ணியிருப்பார். இளன் டீட்டெய்லாக சொல்லவில்லை என்றும் அந்த சீனை புரிந்துக் கொண்டு அந்த கொண்டையை முடிந்து எழுவது, மற்றும் மீண்டும் கொண்டையை கழட்டிவிட்டு உட்கார்ந்து அழுவது போன்ற காட்சியில் தானே நடித்தேன் என்றும் கூறியுள்ளார். லால் சாருக்கு முன்பாக நமக்கு ஸ்கோப் இருக்காது என நினைத்தேன். ஆனால், இயக்குநர் இளன் பர்ஃபார்ம் பண்ற ரோல் என சொன்னதும் ஒகே சொல்லி படத்தில் நடிக்க சம்மதித்தேன் எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X