twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று!

    |

    சென்னை : நாடகம், சினிமா, தொலைக்காட்சி என அனைத்திலும் ஜாம்பவனாக விளங்கிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் கைலாசம் மற்றும் காமாச்சியம்மாள் தம்பதிக்கு 1930ம் ஆண்டு ஜூலை 30ந் தேதி பிறந்தார்.

    2021ல் சாதிய மறுப்பை சொல்லி ஹிட்டடித்த படங்கள்... நீளும் பட்டியல்! 2021ல் சாதிய மறுப்பை சொல்லி ஹிட்டடித்த படங்கள்... நீளும் பட்டியல்!

    உடல்நலம் பாதிக்கப்பட்ட கே.பாலசந்தர், 2014ஆம் ஆண்டு தனது 84ஆவது வயதில் இதே நாளில் உயிரிழந்தார்.

    நீர்க்குமிழி

    நீர்க்குமிழி

    மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் கே பாலச்சந்தர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார்.மருத்துவமனையை சுற்றியே எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையில் பல நாட்கள் ஓடின.

    பெருமையுடையவர்

    பெருமையுடையவர்

    கே.பாலசந்திரால் அறிமுகம் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் அநேகம். அதில் கமல், ரஜினி இருவரையும் தமிழ்த் திரையுலகம் உள்ள வரை பெருமையுடன் சொல்லலாம். அவர் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் இதுவரை எந்த சினிமாவிலும் கையாளப்படாத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

    சமூக பிரச்சினைகள்

    சமூக பிரச்சினைகள்

    அபூர்வ ராகங்கள், தாமரை நெஞ்சம், கல்யாண அகதிகள், சிந்து பைரவி, புதுபுது அர்த்தங்கள், வானமே எல்லை, கல்கி போன்ற திரைப்படங்கள் மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாக இருக்கும்.

    காலமானார்

    காலமானார்

    பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், கடைசியாக கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி அதனை பார்க்கும் முன்பே, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.பாலசந்தர், 2014ம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி மாலை பாலச்சந்தர் உயிரிழந்தார்.

    நினைவு தினம்

    நினைவு தினம்

    இந்நிலையில் , கே பாலசந்தரின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாலசந்தரின் தீவிர ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    English summary
    K Balachander on his 7th death anniversary
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X