For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதை தனியாக படித்துப் பார் என்று சொல்லி மோகனின் வாழ்க்கையை மாற்றினார் கே.பி

|
ரஜினி சினிமா விட்டு போறேன்னு சொன்னாரு | KAMAL SPEECH|BALACHANDER STATUE UNVEIL |FILMIBEAT TAMIL

சென்னை: தமிழ் சினிமா வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர் மேனேஜர் மோகன். இவர் கே.பாலசந்தரின் மேனேஜர், தனி செக்கரட்டரி, தயாரிப்பு நிர்வாகி. இவரை கே.பி.மோகன் என்றே அனைவரும் குறிப்பிடுவார்கள். ஏன் அனைவரது கைப்பேசிகளில் கே.பி.மோகன் என்று தான் பதிவு செய்யப் பட்டு இருக்கும்.

கே.பாலசந்தர் மிகவும் கோபக்காரர். அவர் அணிந்த உடை போல் தூய்மையானர் நேர்மையானவர். கடும் உழைப்பாளி சிந்தனையாளர். தமிழ் சினிமாவில் இவரால் அறிமுகம் செய்து புகழ் பெற்ற நட்சத்திரங்கள் ஏராளம் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிரஞ்ஜீவி ஶ்ரீதேவி ஜெயப்பிரதா விவேக் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் இவரது அறிமுகம் என்பது நாம் அறிந்தது. மூன்று பல்கலைக் கழகங்கள் மூலம் மூன்று முறை டாக்டர் பட்டம் பெற்றவர். இந்திய அரசு

" தாதா சாஹேப் ஃபால்கே விருது " பெற்ற ஒரே தமிழ் இயக்குனர் இவர் மட்டுமே.

K.Balanchander is always remembered with lots of memories

இப்படி பட்ட பாலசந்தரோடு 27 வருடங்கள்

கடந்து வந்தவர்.

இவர் சந்திக்காத பிரபலங்கள் இல்லை. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு பக்க பலமாக , இன்னும் .சொல்ல போனால்

" பக்கா " பலமாக அவர் அருகே நின்று கவனித்தவர்.

K.Balanchander is always remembered with lots of memories

இவரை கவிஞர் வாலி வாய்யா பாலசந்தரின் நிழலே என்றே தான் அழைப்பார்.

இவர் நிறையப் படங்களில் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக சமுத்திரக்கனியின் எல்லா படங்களிலும் இவர் இருப்பார். ஏனென்றால் சமுத்திரக்கனியும் கே.பாலசந்தரின் மாணவர் தான். பாலசந்தர் அவர்களின் மேனேஜர் மற்றும் உதவி இயக்குனராக

உத்தம வில்லன், மாய கண்ணாடி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

K.Balanchander is always remembered with lots of memories

இயக்குனர் சிகரம் இறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கே.பி சாருடன் பணிபுரிந்த நினைவுகள் இவரின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது என்றால் மிகையில்லை.

கலைப்புலி தாணு அவர்கள் பாலசந்தர் அவர்களிடம் மோகனுக்கு நீங்க திருமணம் செய்து வைக்க வேண்டாமா? என்று கேட்டு வைக்க, உடனே மோகனுக்கு புத்தாண்டு அன்று ஒரு கடிதம் எழுதி, இவருக்கு "Conduct" certificateம் கொடுத்து, இதை தனியாக படித்துப் பார் என்று கொடுத்து விட்டார் கே.பி. பிறகென்ன உடனே திருமண வேலைகள் துவங்கி விட்டது. திருமண பத்திரிகையே பாலசந்தரின் கைப்பட எழுதிய கடிதம் தான் தனது மனைவியுடன் அவரும் கையெழுத்து இட்ட கடிதம் தான் இவரின் திருமண பத்திரிகை. கே.பியின் குடும்பத்தார் அனைவரும் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

அதற்கு பிறகு கவிப்பேரரசு

வைரமுத்துவிடம் கே.பி அவரது திருமண மண்டபத்தை உபயோகிக்க கேட்டதும் கவிப்பேரரசு மோகனுக்கு இலவசமாகவே கொடுத்தார்.

எல்லா பிரபலங்களும் கலந்து கொண்ட இவர் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் கே.பி.

கே.பியிடம் மோகன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்பது கே.பியிடம் பழகிய அனைவருக்கும் தெரியும்.

மோகனை வாய்யா என்றும் வாடா என்றும் ஏன் கம்மனாட்டி என்றும் அன்பாக வெரிகுட்ரா கண்ணா என்றும் சம்பங்களுக்கு தகுந்தாற் போல் பாலச்சந்தர் அழைப்பார்.

K.Balanchander is always remembered with lots of memories

கே.பாலசந்தரின் வாழ்க்கையின் முக்கிய பக்கங்களில் மோகனும் இருக்கிறார். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

தனது சுய சரிதத்தில் இந்த மதுரை வீரனைப் பற்றி பல பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

மோகனுக்கு தாடி தான் அடையாளம் அதை பலமுறை கே.பி எடுக்க சொல்லி பிறகு பாலசந்தரே தாடி தான் அவனுக்கு பலமே என்று கூறியிருக்கிறார்.

கே.பியின் மனைவி ராஜம் பாலசந்தர் இவரை நீயும் எங்கள் வீட்டுப் பிள்ளை தான் என்று குறிப்பிடுவார்.

தனது மூத்த மகன் கைலாசம் இறந்தது பாலசந்தர் மிகவும் மனமுடைந்து விட்டார் என்று ஒரு பேட்டியில்

மிகுந்த மன வருத்தத்துடன் மோகன் கூறியிருந்தார்.

தற்பொழுது தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தேசிய விருது வாங்கிய

நடிகர் சமுத்திரக்கனி அவர்களிடம் மானேஜராக பணி புரிகிறார்.

ஊடகவியாளர்கள் மத்தியில் எப்போதுமே இவருக்கு ஒரு நன்மதிப்பு உண்டு. எதையும் உண்டு இல்லை என்பதை தெளிவாக கூறி விடுவார் என்ற

பாராட்டும் இவருக்கு உண்டு. புகழின் உச்சம் அடைந்த ஜாம்பவான்கள் அனைவருக்கும் பின்னணியில் மோகன் போன்ற

வலது கரமாக திகழும் மேனேஜர்கள் பலர் உண்டு. கண் போல் பார்த்துக் கொள்ளும் இவர்கள் தான் சினிமா என்ற கலை இயந்திரத்துக்கு அச்சாணி எனபது மறுக்க முடியாத உண்மை.

K.Balanchander is always remembered with lots of memories

சமீபத்தில் பாலச்சந்தர் அவர்களது சிலை சென்னையில் கமல் சாரும் ரஜினி சாரும் திறந்து வைத்தார்கள்.. நிறைய கேமராக்கள் ரஜினி சாரையும் கமல் அவர்களையும் கிளிக் செய்து கொண்டு இருந்தது , பல பிரபலங்கள் கூட கே.பி சிலையுடன் நின்று ஆத்மார்த்தமாக போட்டோ எடுத்து கொண்டார்கள். ஆனால் மோகன் நின்று எடுத்துக் கொண்டது சிலையான தன் இயக்குனர் சிகரத்தோடு எடுத்த போட்டோ- வெறும் போட்டோவாக பார்த்து விட முடியாது. அவர் வாழ்ந்த வாழ்க்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கே.பி சாருடைய இதய துடிப்பை உணர்ந்த மகத்துவமான மானேஜர் என்று தான் பார்க்க தோன்றுகிறது.

கே.பி சார் மறைவுக்கு பிறகு பலர் பல மனிதர்கள் அவர் நினைவுகளை பற்றி பகிர்ந்துகொண்டு வந்தார்கள் , யார் கே.பி சார் பற்றி பேசினாலும் மோகன் பற்றி பேசாமல் அவர்கள் முடிக்க முடியாத அளவுக்கு எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.

கட் அண்ட் ரைட் ஆக இருந்ததால் கே பி சார் மோஹனை பாராட்டுவார், ஆனால் ஊடக நண்பர்களும் சினிமா துறையினரும் மோஹனை திட்டுவார்கள் . அதை பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் விசுவாசமாக இருப்பது மட்டும்தான் என் கடமை என்று நெஞ்சை நிமிர்த்தி உரிமையுடன் பேசி புரியவைப்பார்.

கே பி சார் இப்போ இல்லை இனி மோகன் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி வந்த பொழுது நான் இருக்கிறேன் என்று சரியான சமயத்தில் வந்து நின்றவர் தான் சமுத்திரகனி. இதற்காகவே ஒரு ஸ்பெஷல் சல்யூட் கனி சாருக்கு கொடுக்க வேண்டும்.

சமுத்திரக்கனி மோகனைப் பற்றி நன்கு அறிந்தவர் தெரிந்தவர். அவருடைய அனுபவம் மற்றும் குணங்களை நன்கு புரிந்தவர் என்ற முறையில் மோகனுடைய வாழ்க்கை மிகவும் பிரகாசமாக தொடர வேண்டும் என்று முடிவு எடுத்து தன்னுடன் இணைத்து கொண்டுள்ளார்.

இப்போதும் மோகனிடம் அதே நடை , அதே டைமிங் அதே சின்சியாரிட்டியுடன் சமுத்திரகனி ஆபீஸில் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வலம் வருகிறார்.

மோகன் போன்ற மனிதர்களை மெஜஸ்டிக் மனிதர்காக நம் சினிமா உலகம் பார்க்கிறது.

இவரைப் போல மனிதர்களை சினிமா அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

English summary
K.B Mohan was the manager of legend director K.Balachander and his memoirs with him for more than 27 years is remarkable and days spent with the legendary director is always wonderful and will stand in heart forever and ever...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more