twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.பாக்யராஜ், ஏ.எல். உதயா நீக்கம்?..நடிகர் சங்கம் அதிரடி!

    |

    சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல் உதயா நீக்கப்பட்டுள்ளனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.

    தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    நடிகர் விமலுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது யாருனு தெரியுமா?இவர் எப்பவுமே ஸ்மார்ட் தான்!நடிகர் விமலுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது யாருனு தெரியுமா?இவர் எப்பவுமே ஸ்மார்ட் தான்!

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என உத்தரவிட்டது.

    தேர்தல் செல்லும்

    தேர்தல் செல்லும்

    இதையடுத்து, நாசர், விஷால், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, முகமது ஷபீர் ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    பாண்டவர் அணி வெற்றி

    பாண்டவர் அணி வெற்றி

    அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில், தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது.

    ஏன் நீக்கக்கூடாது

    ஏன் நீக்கக்கூடாது

    இதையடுத்து, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.பாக்யராஜ் நீக்கம்

    இந்நிலையில், நடிகர் சங்க விதியின் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், சினிமா வட்டாரத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    K. Bhagyaraj and AL Udaya have been expelled from South Indian Actors Association.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X