twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்!

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

    |

    Recommended Video

    சர்கார் விவகாரம்.. கே.பாக்யராஜால் அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்- வீடியோ

    சென்னை: சர்கார் விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்த இயக்குநர் கே.பாக்யராஜ், மீண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    சர்கார் திரைப்படத்தின் கதை விவகாரத்தில் மிக அழுத்தமாக செயல்பட்டவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ். இதன் காரணமாகவே அந்த பதவியை அவர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.

    K.Bhagyaraj becomes wirters association president again

    ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சக நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். பாக்யராஜ் தலைவராக இல்லாத சங்கத்தில் தாங்கள் நிர்வாகிகளாக இருக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

    சக நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, எழுத்தாளர் சங்க விவகாரம் குறித்து கே.பாக்யராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது தான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார்.

    English summary
    Director K.Bhagyaraj again becomes the president of south Indian writers association.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X