அட கடவுளே.. இப்படி ஒரு துக்கத்தை எப்படி தாங்கினார் பாக்யராஜ்.. பிரபலம் பகீர் தகவல்!
சென்னை: இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னன் என பலர் மனதில் இடம் பிடித்த கே.பாக்யராஜில் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள வேளையில், பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் அளித்துள்ள பேட்டி ஒன்று, பாக்யராஜின் திரைக்குப் பின்னால் இருந்த கண்ணீர் பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
முதல் காதல் வாழ்க்கை: பாக்யராஜ் 1981-ம் ஆண்டு நடிகை பிரவீனாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. உடல்நலக் குறைவால் பிரவீணா திடீரென மரணமடைந்தார். இந்த முதல் இழப்பு பாக்யராஜை நிலைகுலையச் செய்தது. அதன் பிறகு, நடிகை பூர்ணிமாவை அவர் காதலித்த போது, எனது பெற்றோருக்குச் சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என பூர்ணிமா சொன்னதால், எம்.ஜி.ஆர் அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க, பூர்ணிமா - பாக்யராஜ் திருமணம் நடைபெற்றது.

தற்கொலை முயற்சி: இந்த தம்பதிகளுக்கு சாந்தனு, சரண்யா என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இதில் மகள் சரண்யாவின் வாழ்க்கை தான் பாக்யராஜை உயிரோடு கொன்றது என்கிறார் வித்தகன். சமூக வலைத்தளம் மூலமாகச் சரண்யாவுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபரை மட்டுமே காதலித்த சரண்யா, அவரைப் பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கும் சென்றார். ஆனால், அந்த நபர் சரண்யாவை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
தீராத வேதனை: இந்தக் கடுமையான ஏமாற்றத்தாலும் மன வேதனையாலும் உடைந்த சரண்யா, அடுத்தடுத்து இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அன்று மட்டும் தந்தை பாக்யராஜும், தாய் பூர்ணிமாவும் காப்பாற்றவில்லை என்றால் அன்றே அவரது கதை முடிந்திருக்கும். அப்படிப் போராடிக் காப்பாற்றிய மகளுக்கு அண்மையில் ஒரு திருமணம் நடந்து, குழந்தையும் பிறந்தது. ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையிலும் ஏதோவொரு புயல் வீச, தற்போது குழந்தையுடன் மகள் சரண்யா தனியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்தத் தீராத கவலை பாக்யராஜை தினசரி வாட்டியது.

11 ஆண்டுகால ஏக்கம்: மறுபுறம், அவரது மகன் சாந்தனுவும் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை. ஒரு தந்தையாகத் தன் மகனுக்குச் சினிமாவில் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லையே என்ற கவலை ஒருபுறமிருக்க, தனக்குப் பேரக் குழந்தையைக் காட்டும் பாக்கியம் இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் பாக்யராஜின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை, வாரிசுகளின் இந்த இரண்டு கவலைகளையும் நெஞ்சுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டு, வெளியே எப்போதும் சிரித்த முகத்துடனே வலம் வந்துள்ளார். வித்தகன் பகிர்ந்துள்ள இந்த துயரமான பின்னணியைக் கேட்ட நெட்டிசன்கள், அட கடவுளே.. இத்தனை துக்கங்களையும், துயரங்களையும் மனதுக்குள் தாங்கிக்கொண்டு எப்படி இந்த மனுஷன் இவ்வளவு காலம் வாழ்ந்தார் என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications