பாக்யராஜை மிரட்டிய ஊர்வசி.. ஒன்னும் சொல்ல முடியாமல் தவித்த திரைக்கதை மன்னன்.. பாவம்

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் இந்திய திரைத்துறையின் திரைக்கதை மன்னன். அவரது படங்கள் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுபவை. எதார்த்தமான படங்கள் பார்க்க வேண்டுமா; அதற்கு பாக்யராஜின் படங்கள் மட்டுமே முழுமையான தேர்வாக இருக்கும். சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அவர் தன்னுடைய 73வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று (27.6.2026) உயிரிழந்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாக்யராஜ். உதவி இயக்குநர் மட்டுமின்றி வசனகர்த்தா, கதாசிரியர், ஹீரோ என எல்லாமுமாக அவரிடம் இருந்தார். தன்னுடைய ஆஸ்தான உதவி இயக்குநர் என்றால் அவர் பாக்யராஜ்தான் என்பதை பாரதிராஜாவும் பல சமயங்களில் உணர்த்தியிருக்கிறார். அவரிடமிருந்து ஒருகட்டத்தில் வெளியே வந்த இவர் சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் இயக்குநராக மாறினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

K Bhagyaraj Passes Away at 73 Urvashi s Emotional Interview About the Legendary Filmmaker Goes Viral
Photo Credit:

பிஸி இயக்குநர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பாக்யராஜின் வண்டி முழு வேகத்தில் ஓடியது. அவர் இயக்கிய, 'முந்தானை முடிச்சு', 'தாவணி கனவுகள்', 'மௌன கீதங்கள்', 'சின்ன வீடு', 'ஒரு கை ஓசை', 'ராசுக்குட்டி' என பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. முக்கியமாக அதன் திரைக்கதையும், வசனும் எல்லோராலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது திரைக்கதை அருமையாக இருந்ததால் அவரை திரைக்கதை மன்னர் என்றும் அழைப்பார்கள்.

Also Read
இயக்குநர் பாக்யராஜ் மரணம்.. உச்சக்கட்ட அதிர்ச்சி.. அய்யோ.. என்ன ஆச்சு?
இயக்குநர் பாக்யராஜ் மரணம்.. உச்சக்கட்ட அதிர்ச்சி.. அய்யோ.. என்ன ஆச்சு?

என்ன ப்ளஸ்: பாக்யராஜ் அடிப்படையில் நாடகங்களிலிருந்து வந்தவர். ஏராளமான நாடகங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். அந்த அனுபவம் சினிமாவிலும் அவருக்கு கைகொடுத்தது. தன்னுடைய திரைக்கதைகளில் எப்போதும் ஒரு ஹூக் பாயிண்ட்டை வைத்துக்கொண்டு அடுத்தடுத்த சீன்களுக்கு அவர் செல்வது அப்போதைக்கு பெரிய அளவில் ஈர்த்தன. அந்த திரைக்கதை பலம்தான் அவர் இன்றளவும் நிற்க காரணம்.

உயிரிழந்த பாக்யராஜ்: எம்ஜிஆரால் தன்னுடைய கலையுலக வாரிசு என பிரகடனப்படுத்தப்பட்டவர்; குணசித்திர நடிகராக கலக்கிவந்தார். இப்போது அதிலிருந்தும் கொஞ்சம் ஒதுங்கியிருந்த அவர்; தன்னுடைய குடும்பத்துடன் நிம்மதியாக இருந்துவந்தார். நிலைமை இப்படி இருக்க மாரடைப்பால் இன்று தன்னுடைய 73வது வயதில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போலோ மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லும்போது உயிர் பிரிந்துவிட்டதாகவும் அந்த குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரெண்டாகும் ஊர்வசி பேட்டி: இந்நிலையில் பாக்யராஜால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஊர்வசியின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "என்னுடைய முதல் படமே பாக்யராஜுடையது. அவர்தான் புடவை கட்டி நடிப்பது எப்படி என சொல்லிக்கொடுத்தார். அந்தப் படத்தில் என்னுடைய அக்காதான் முதலில் நடிக்க வேண்டியதாக இருந்தது.

ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் நான் நடித்தேன். அந்தப் படத்தில் நடித்தபோது பாக்யராஜிடம் நான்,'ஏதாவது திட்டினால் ட்ரெய்ன் பிடித்து வீட்டுக்கு போய்விடுவேன்' என்று சொல்லித்தான் நடித்தேன். அவரும் ஒன்றும் செய்ய முடியாமல் தனக்குள்ளேயே, 'ஏதாவது சொன்னால் வீட்டுக்கு வேற போய்விடும்' என கடுப்போடு சொல்லிக்கொள்வார். நான் ஹோம் ஒர்க் எல்லாம் செய்யமாட்டேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X