Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.
சென்னை : இயக்குனர் கே பாக்யராஜிடம் சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜா. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் "DRK கிரண் நடித்திருக்கும் குறும்படம் அல்வா நிறைய நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது .
கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் மற்றும் அவரின் தாயார் 'மல்லிகா மூவிஸ்' என்ற பெயரில் பல குறும்படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார்.
இந்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார்.
சொந்த பந்தம்
இவர் இயக்கிய 'ஒரு நாள்', 'இருவர்', 'சொந்த பந்தம்' போன்ற குறும்படங்கள் பல விருதுகளை வாங்கி இவரை நம்பிக்கையான இயக்குனராகவும் திரைத்துறையில் மாற்றியிருக்கிறது. இவரது பல படங்கள் ஆதித்யா டிவி மற்றும் சன் தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது
நகைச்சுவை நாயகன்
பல படங்களில் எதிர் நாயகனாக நடித்து வரும் கலை இயக்குனரும் நடிகருமான DRK கிரணை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முழுநீள நகைச்சுவை நாயகனாக மாற்றி இயக்கியிருக்கிறார். அந்த குறும்படத்திற்கு அல்வா என்று பெயர் சூட்டியிருக்கிறார்
நாயகியாக வெண்பா
35 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஹீரோவுக்கு 22 வயதுள்ள இளம் அழகான பெண்ணை மணமுடித்து வைத்து, மொத்த குடும்பமும் சேர்ந்து இருவருக்கும் முதலிரவு நடத்த விடாமல் நடத்தும் கலாட்டாவை நகைச்சுவை கலந்த பின்னணியில் உருவாக்கியுள்ளார். மேலும், அவருடன் முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் அவ்வை சண்முகியின் காதலனாக நடிக்க மற்றும் அவரது மகன் மகாவும் நடிக்கிறார் , கதையின் நாயகியாக வெண்பா, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
24 நிமிடம்
பல படங்களில் பாடல் எழுதிவரும் ஞானவேல் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். கலை இயக்குனராக பிரியா சுதர்சன், ஒளிப்பதிவாளர் தினேஷ், எடிட்டர் தியாகு, இசையமைப்பாளர் சோகன் பாபு மற்றும் ரோஹித் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இதில் நடிகர் தம்பி ராமையா ஒரு பாடலை பாடி அசத்தி இருக்கிறார். 24 நிமிடம் ஓடக்கூடிய நகைச்சுவை கொண்ட குறும்படம் விரைவில் வெளியாகிறது. கோவை ராஜாவின் அல்வா நன்றாக கிண்டப்பட்டு சுவையுடன் அனைவருக்கும் ரசிக்கும் படி கண்டிப்பாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.