சர்கார் பிரச்சினைக்கும் அப்பா ராஜினாமாவுக்கும் சம்பந்தமில்லை: கே.பாக்யராஜ் மகன் சாந்தனு டிவீட்
சர்கார் பிரச்சினையால் தனது அப்பா ராஜினாமா செய்யவில்லை என சாந்தனு கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: சர்கார் படப் பிரச்சினைக்கும் அப்பா ராஜினாமாவுக்கும் சம்பந்தமில்லை என நடிகரும், பாக்யராஜ் மகனுமான சாந்தனு தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றுள்ளார் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன். இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க பெரிதும் உதவியவர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான நடிகர் கே.பாக்யராஜ்.

ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு சந்தர்ப்பத்தில் சர்கார் கதையை ஊடகங்களில் கூற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் பலரது எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாக்யராஜ். சொல்ல முடியாத பல அசௌகரியங்களைச் சந்தித்ததாக தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ள பாக்யராஜ், சர்கார் படக்கதையைக் கூறியதற்காக சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இந்நிலையில், தன் தந்தையின் ராஜினாமாவிற்கும், சர்கார் பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் சாந்தனு.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, முன்னதாக சர்கார் கதையை ஊடகங்களில் கூறியதற்காக தன் அப்பாவிற்காக டிவிட்டரில் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











