நமிதாவோட அந்த சீன் கண்ணுலயே நிக்குது.. தேவயானியை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.. பாக்யராஜ் பளிச்!

சென்னை: நடிகை தேவயானி நடித்துள்ள 'நிழற்குடை' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தான் 3 பேருக்கு ரசிகன் என பேசியிருந்தார். மேலும், நமிதாவின் ஒரு சீன் இன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது என்றும் தேவயாணியின் நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

இயக்குநர் சிவ ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, வடிவுக்கரசி, நீலிமா ராணி, கண்மணி மனோகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள நிழற்குடை திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

K Bhagyaraj says he is a big fan of Namitha Seeman and Devayani

பாக்யராஜ், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு நடிகை தேவயானி மற்றும் அவரது கணவர் ராஜகுமரனை பலரும் பாராட்டி பேசினர். பாக்யராஜ் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வர காரணம் தேவயானி, நமிதா உள்ளிட்ட நடிகைகளுக்கு தான் ரசிகன் என அவர் பேசியது தான்.

3 பேருக்கு நான் ரசிகன்: எம்ஜிஆர் ரசிகனாக இருந்து வந்த பாக்யராஜ் இப்போ இந்த 3 பேருக்குத்தான் ரசிகன் எனக் கூறியிருக்கிறார். நடிகை நமிதாவை தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அவரது நடிப்புக்குத் தான் ரசிகன் என பேசி ஒட்டுமொத்த அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தினார். அதன் பின்னர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கும் அவரது அரசியல் முன்னெடுப்புகளுக்கும் தான் ரசிகன் எனக் கூறினார். கடைசியாக நடிகை தேவயானிக்கும் தான் ரசிகன் என பேசினார்.

K Bhagyaraj says he is a big fan of Namitha Seeman and Devayani

என் கண் முன்னாடியே நமிதாவை: இதே போன்ற ஒரு சினிமா விழாவில் தான் முதன் முதலில் நடிகை நமிதாவை பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்கு என் மகன் சாந்தனுவும் வந்திருந்தான். நமிதாவை பார்த்ததும் அப்படியே டைட்டாக ஹக் பண்ணிக் கொண்டு இருவரும் ஹாய் ஹாய் என சொல்லிக் கொண்டனர். நான் அப்படியே அங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்ததை அவர்கள் இரண்டு பேரும் பார்த்துவிட்டனர். அதன் பின்னர் என்ன சொல்வதென்றே தெரியாமல் என்னை விட திருட்டு முழியா முழித்துக் கொண்டு என் மகன் சாந்தனு அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டான். இன்னைக்கும் நமிதாவை பார்த்தால் அந்த காட்சி அப்படியே என் கண் முன்னாடி வந்து போகும். அவரோட நடிப்புக்கு நான் ரசிகன் என பாக்யராஜ் பேசினார்.

அன்பு வடியும் முகம்: இந்த நிழற்குடை படத்தில் மட்டுமில்லை தேவயானியின் எந்தவொரு படத்தை பார்த்தாலும் அவரது முகத்தில் அன்பு வடிந்துக் கொண்டே இருக்கும். அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் அந்தளவுக்கு சூப்பராக இருக்கும். அப்படியே தன்னை எப்போதும் வைத்திருக்க அவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. ராஜகுமரனுக்கு உண்மையாகவே அந்த பெயர் தானா? அல்லது சினிமாவுக்கு வந்த பின்னர் வைத்துக் கொண்டாரா தெரியவில்லை. தேவயானி சரியாகத்தான் அவருக்கு கிடைத்திருக்கிறார் என மேடையில் தேவயானியை புகழ்ந்து பேசிவிட்டு பாக்யராஜ் நிச்சயம் இந்த படம் அவருக்கு வெற்றியை தரும் என நம்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X