கே.இ ஞானவேல்ராஜாவுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் கே.இ ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் பல வெற்றிப்படங்களை இன்று வரை தயாரித்து வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த கே இ ஞானவேல் ராஜா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

ஜூன் 30 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல திரைப்பிரபலங்களும் நடிகர்-நடிகைகளும் தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

பல ஆண்டுகள்

பல ஆண்டுகள்

திரைத்துறையில் எவ்வாறு பல படங்கள் வருவதும் போவதும் உண்டோ, அதேபோல திரைப்படத் துறையிலும் பல தயாரிப்பாளர்கள் பல வெற்றிப் படங்களையும் சில தோல்விகளையும் தந்து வெற்றி தயாரிப்பாளராக பல ஆண்டுகள் நிலைத்து நிற்பது அவ்வளவு எளிதல்ல.

வெற்றிக் கொடி

வெற்றிக் கொடி

சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் கணிக்கவே முடியாத நிலையில் மக்கள் இந்த படத்தை ரசிப்பார்கள் என நம்பி எடுத்த படங்களும் இங்கு தோல்வியைத் தழுவிய கதைகள் ஏராளம் உண்டு. எனினும் மக்கள் எதை விரும்புவார்கள் என யோசித்து அந்த படங்களை மட்டும் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் இன்றும் தனது வெற்றிக் கொடியை நாட்டி வருகின்றனர்.

இன்று வரை

இன்று வரை

அந்த வகையில் தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா மிகவும் திறமைசாலி, தான் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் அதன் கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து மக்கள் இதை கண்டிப்பாக ரசிப்பார்கள் என தயாரித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்றுவரை வெற்றியுடன் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சூர்யா மற்றும் கார்த்தி

சூர்யா மற்றும் கார்த்தி

ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில்லுனு ஒரு காதல் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக உருவெடுத்த கே இ ஞானவேல்ராஜா அதை தொடர்ந்து பல படங்களை தயாரித்து அதில் தொடர்ந்து வெற்றியும் கண்டு வந்தார். தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல் ராஜா ஆரம்பத்தில் தயாரித்த அனைத்து படங்களும் சூர்யா மற்றும் கார்த்தி நடிப்பில் உருவானது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

சில்லுனு ஒரு காதல், மெட்ராஸ், பருத்திவீரன், நான் மகான் அல்ல, அட்டகத்தி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற இவர் தயாரித்த எண்ணற்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வசூல் சாதனையை செய்து வந்துள்ளது. இந்நிலையில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், போன்றோர் நடித்துவரும் காட்டேரி என்ற படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.

நற்பெயர்

நற்பெயர்

இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் கே இ ஞானவேல்ராஜா தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்தும் அதை அங்கு தானே வெளியிட்டும் அங்கேயும் தனது வெற்றி கொடியை நிலைநாட்டி வருகிறார். குறிப்பாக சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை தெலுங்கில் மொழி பெயர்த்து மிகவும் பிரபலமான இவருக்கு தெலுங்கு திரைப்படத் துறையிலும் மிகப்பெரிய நற்பெயர் இருந்து வருகிறது.

கே.இ ஞானவேல்ராஜா

கே.இ ஞானவேல்ராஜா

இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வரும் கே.இ ஞானவேல்ராஜா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார். ஜூன் 30 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள், திரைப்படதுறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X