ஹீரோவுக்கு 200 கோடி கொடுத்துட்டு படத்தை 100 கோடில எடுத்தா நல்லா இருக்குமா?.. ஞானவேல் ராஜா நறுக்!
சென்னை: சூர்யாவின் 'கங்குவா' மற்றும் சியான் விக்ரமின் 'தங்கலான்' படங்களை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹீரோவின் சம்பளம் படத்தை விட கூடுதலாக இருந்தால், படத்திற்கான வேல்யூவே இருக்காது என்பது தனது கருத்து என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
கங்குவா படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், நடிகர் சூர்யாவின் சம்பளம் 100 கோடி ரூபாய் கூட இல்லை எனக் கூறுகின்றனர். படத்திற்காகத்தான் அதிக செலவை செய்து வருவதாகவும் 70 சதவீதம் படத்திற்காகவும், 30 சதவீதம் தான் ஹீரோவுக்கான சம்பளமாகவும் தான் கொடுத்து வருகிறேன் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குநர் அமீருக்கும் இடையே பருத்தி வீரன் படத்தில் இருந்தே பஞ்சாயத்து நிலவி வருகிறது. கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்தன. அதையெல்லாம் முடித்து விட்டு தற்போது தங்கலான் மற்றும் கங்குவா படங்களுக்கான புரமோஷன் பணிகளில் மீண்டும் களமிறங்கி உள்ளார் ஞானவேல் ராஜா.
70 - 30 தான் இருக்கணும்: ஹீரோக்களின் சம்பளம் 30 சதவீதம் தான் இருக்கணும். படத்திற்கான பட்ஜெட் தான் 70 சதவீதம் இருக்கும். அப்போது, தான் படம் குவாலிட்டியாக ரசிகர்களுக்கு கிடைக்கும். பாகுபலி, ஆர்ஆர்ஆர் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படம் வரை அதே ஃபார்முலா தான். என்னுடைய படங்களான கங்குவா மற்றும் தங்கலான் படங்களும் அதே ஃபார்முலா தான் என ஞானவேல் ராஜா பேசியுள்ளார்.
200 கோடி சம்பளம்: அதை விடுத்து நடிகர்களுக்கு 100 கோடி சம்பளம், 200 கோடி சம்பளம் என கொடுத்து விட்டு, படத்தின் பட்ஜெட்டை 30 சதவீதமாக குறைத்து விட்டால், அந்த படம் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என தெரியாது. 50 சதவீதம் படத்தின் பட்ஜெட், 50 சதவீதம் சம்பளம் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை என ஞானவேல் ராஜா பேசியுள்ளார்.
விஜய்க்கு எதிராக?: சூர்யாவின் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகிறார் என சோஷியல் மீடியாவில் அவரை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் சொல்வதில், நியாயம் இருக்கத்தானே செய்கிறது. தயாரிப்பாளராக அவரது கருத்தை சொல்கிறார் என்றும் அவருக்கு ஆதரவாக சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கங்குவா பான் இந்தியா படம்: வெறுமனே பாலிவுட் நடிகர்களை போட்டு விட்டால் மட்டுமே அந்த படம் பான் இந்தியா படமாக இருக்காது. அந்த படத்தில் பான் இந்தியா கன்டென்ட் இருக்க வேண்டும். கங்குவா படத்தில் அந்த விஷயம் இருக்கிறது. பாபி தியோல், திஷா பதானியை மட்டுமே நம்பாமல் சிவா தனது கருத்தையும் கதையையும் நம்பி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். சூர்யா இந்த படத்திற்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறுவார் என ஞானவேல் ராஜா பேசியுள்ளார். கங்குவா திரைப்படம் பாகுபலி அளவுக்கு பெரிய வசூல் வேட்டையை இந்த ஆண்டு நடத்துமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











