ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்காமே.. வரும் 21 ஆம் தேதி வெளியாகிறது கே.ஜி.எஃப் சாப்டர் 2 அப்டேட்!
சென்னை: கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் அடுத்த அப்டேட் வரும் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது.

ஶ்ரீனிதி ஷெட்டி
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார்.

சஞ்சய் தத் பங்கேற்பு
முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதில் இருந்து முழுவதும் குணமடைந்து இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார்

சில காட்சிகள்
கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மங்களூரில் மீண்டும் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கூறி இருந்தார்.

ரசிகர்களுக்காக
இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 'அந்த நாள் வந்துவிட்டது. நாங்கள் இந்தப் படத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். டிசம்பர் 21 ஆம் தேதி ரசிகர்களுக்காக எப்போதும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுவோம்.

காத்திருக்கும் ட்ரீட்
அதை இந்த வருடமும் பின்பற்றுகிறோம். வரும் 21 ஆம் தேதி 10.08 மணிக்கு காத்திருக்கிறது ட்ரீட் என்று படக்குழு கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 1 ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் இயக்குனர் பிரஷாந்த் நீல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











