Moonbin dead: ஷாக்கிங்.. வெறும் 25 வயசு தான் ஆகுது.. கொரிய பாப் பாடகர் மர்ம மரணம்.. ரசிகர்கள் சோகம்
சியோல்: தென்கொரியாவை சேர்ந்த பிரபல கொரிய பாப் பாடகர் மூன்பின் தனது குடியிருப்பில் புதன்கிழமை இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெறும் 25 வயதே ஆன இவர் புகழ்பெற்ற பாய் பேண்ட் ஆஸ்ட்ரோ குழுவின் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்பின் திடீரென உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் கொரிய ரசிகர்களையும் இசை உலகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரிய பாடகர் மரணம்: தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மூன்பின் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென மர்மான முறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என முதல் கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக கொரியாவில் பாடகர்களும் இளம் நடிகர்களும் மர்மமான முறையில் மரணிப்பது தொடர்கதையாகி உள்ளது. சிலர் தற்கொலையும் செய்து கொண்டு இறந்துள்ளனர். மூன்பின் உயிரிழந்த செய்தியை அவரது மேலாளார் மீடியா மற்றும் ரசிகர்களுக்கு சோஷியல் மீடியா வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாரா? வெறும் 25 வயதில் அப்படி அவருக்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

பாடகர் மூன்பின்னுக்கு ரசிகர்கள் இரங்கல்: கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபெண்டாஜியோ லேபிள் டிரெய்னிங்கில் பாடகராக அறிமுகமானவர் மூன்பின் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என அந்நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இரங்கல் பதிவை போட்டுள்ள நிலையில், மூன்பின்னின் ஏகப்பட்ட இசை ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











