Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷாருக்கான் படமா இது?... வயிற்றெரிச்சல்... விஜய், அட்லியை தரமாக கலாய்த்த தயாரிப்பாளர்!
சென்னை : முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் தயாரிப்பாளர் கே ராஜா விஜய் மற்றும் அட்லியை சரமாரியாக கலாய்த்து பேசினார்.
சாய் மோரான் இயக்கத்தில், திலீப் சர்மா ,திலீப் ஜெயின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் முகமறியான்.
விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
பாவம்
பிரைட்
நடிகர்..
படத்துக்கு
ஹைப்பே
இல்லையாம்..
மீண்டும்
ஒடிடிக்கே
ஓடி
போய்விடுவாரோ?

முகமறியான்
முகமறியான் திரைப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவில், சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், அதில், தயாரிப்பாளர்களை மதிக்காத எந்த நடிகரும், நடிகையும் கொஞ்ச நாளைக்குத்தான் நல்லா இருக்க முடியும். தயாரிப்பாளரின் வயிரெறிய வைக்கும் இயக்குநரோ, நடிகரோ நல்லாவே இருக்க முடியாது என்றார்.

தயாரிப்பாளரை மதிப்பதே இல்லை
கங்கைஅமரன், சுந்தர் சி, பிவாசு, ராம் போன்ற இயக்குநர்கள் தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில இயக்குநர்கள் படத்திற்கு பூஜை போட்டதும் தயாரிப்பாளரை மதிப்பதே இல்லை. தயாரிப்பாளரை யாராவது அவமானப்படுத்தினால், தேவை இல்லாத நஷ்டத்தை ஏற்படுத்தினால் அவர்களை நான் கேள்வி கேட்பேன் என்றார்.

ஷாருக்கான் படம்
ஷாருக்கன் நடித்த சக்தே இந்தியா என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன் அதில், பெண்களுக்கு ஹாக்கி பயிற்சி கொடுத்து உலக மேட்சிற்கு கொண்டு போகிறார் கோச் ஷாருக்கன். இதுதான் படத்தின் ஒன் லைன் கதை. இந்த படம் இந்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

30 கோடி நஷ்டம்
இந்த திரைப்படத்தை தழுவித்தான் தமிழில் ஒரு படம் எடுக்கப்பட்டது. ஹாக்கியை அப்படியே புட்பால் கேமாக மாற்றிவிட்டார்கள். இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ஆன செலவு மட்டும் 300 கோடி, நஷ்டம் 30 கோடி அதை தயாரிப்பாளர் வெளியில் சொல்லவில்லை.

விஜய் அட்லியை கலாய்த்தார்
குறைந்த பட்ஜெட்டில் அழகான கதைக்களத்துடன் எடுக்க வேண்டிய படத்தை பிரம்மாண்டமாக்கி பட்ஜெட்டை எகிறவைத்து தயாரிப்பாளர்களை நஷ்டமடைய செய்கிறார்கள். கொஞ்சமாவது தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் என்று மறைமுகமாக விஜய் மற்றும் அட்லியை கலாய்த்துப் பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.