பேராசை.. வீட்டை கொத்தனார் சொந்தம் கொண்டாடுற கதையா இருக்கு.. இளையராஜா விவகாரம்.. தயாரிப்பாளர் தாக்கு!
சென்னை: இளையராஜாவின் காப்புரிமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வைரமுத்துவை எதிர்த்து வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த நிலையில் பஞ்சாயத்து பெரியது ஆனது.

இந்நிலையையில் தொடர்ந்து பலரும் இளையராஜாவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களின் கூறி வருகின்றனர். தயாரிப்பதற்கு ராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது கட்டடம் கட்டும் கொத்தனாருக்கு அந்த இடமே சொந்தம் ஆகுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
இசைக்கு காப்புரிமை: இளையராஜாவின் இசையில் உருவாகும் பாடல்களுக்கு அவரிடம் காப்புரிமை உள்ளது. அந்த பாடலை அவர் அனுமதி இன்றி அவருக்கு உரிய உரிமைத் தொகையை செலுத்தாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடர்ந்துள்ளார். கச்சேரிகளில், சினிமாக்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பாடலை பாடியவர்கள், எழுதியவர்கள், நடித்தவர்கள் என அந்தப் பாடலுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களே அந்த பாடல்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
கே. ராஜன் கேள்வி: தயாரிப்பாளர் கே. ராஜன் சினிமா விழாக்களில் பேசினாலே சர்ச்சையை கிளப்புவார். இந்நிலையில், இளையராஜா விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “கட்டடம் கட்டும் கொத்தனாருக்கு அந்த வீடே சொந்தம் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இளையராஜாவின் நியாயம்” என பேசியுள்ளார்.
பேராசை: மேலும், இசைஞானியான இளையராஜா பல ஆண்டுகள் திரைத் துறையில் பல சாதனைகளை செய்த நிலையில், அவரது பேராசை காரணமாக தற்போது அனைத்து இடங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார் எனக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் தானே பணம் போட்டு படம் எடுக்கிறார். அந்த படத்தின் இயக்குநர் சிச்சுவேஷன் சொன்னால் தானே இசையமைப்பாளர் பாடலை உருவாக்க முடியும். பாடுபவர், இசை ட்ரூப்பில் ஒவ்வொரு வாத்தியங்களையும் வாசிப்பவர், பாடலாசிரியர் என ஒரு பாட்டுக்கு பலரும் உழைப்பை போட்டு வரும் நிலையில் ஒரே ஒருவர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது எப்படி சாத்தியமாகும் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











