பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ*லை.. இப்படி ஒரு முடிவா?
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில், குதித்து தற்கொ*லை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 85. இவ்வளவு வயது மூப்பில் தற்கொ*லை செய்து கொள்ள என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவரது இந்த விபரீத முடிவு, மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் இருக்கும் மிகவும் தைரியமானவர்களில் ஒருவர் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன். ஆடியோ லாஞ்ச்களில் கலந்து கொள்ளும் போது இவரது பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அதிலும் நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தவர். இவர் தற்கொ*லை செய்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
தயாரிப்பாளர் கே. ராஜன் கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான பிரமச்சாரிகள் படத்தின் மூலம் திரை உலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர். அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்தனர்.
திரைத்துறையின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் இவரை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக மாற்றியது. கடந்த 2000ஆம் ஆண்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார். சக தயாரிப்பாளர் ஒருவரைத் தாக்கியதற்காக 2001ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படமான பகாசூரன் என்ற படத்தில் நடித்திருந்தார். நான்கு படங்களைத் தயாரித்துள்ளார். இரண்டு படங்களை இயக்கி உள்ளார். எழுத்தாளராக இரண்டு படங்களில் பணியாற்றி உள்ளார். இவரது இந்த விபரீத முடிவு மொத்த திரையுலகையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
வாழ்க்கையின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. அது நம்மை நேசிப்பவர்களுக்கு ஆறாத வடுக்களையே தரும். மனபாரம் அதிகமாகும்போது, தகுந்த நபர்களிடம் பேசிப் பகிர்வதே புத்திசாலித்தனம். துணிவோடு எதிர்கொண்டால் எந்த சவாலையும் வெல்லலாம். நம் உயிர் விலமதிப்பற்றது, வாழ்ந்து காட்டுவோம்!
இலவச மனநல உதவி எண்கள்:
சினேகா (Sneha Helpline): 044-24640050
மத்திய அரசு உதவி எண் (KIRAN): 1800-599-0019
மாநில அரசு உதவி எண்: 104


Click it and Unblock the Notifications