தனுஷ் மீது ரசிகர்களுக்கு அபிப்ராயமே இல்லை.. தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் நூறு கோடி ரூபாய் அந்தப் படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் ராயன் படத்துக்கு முன்னதாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை அடுத்த படத்தில் அவர் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்

ராயன்: அதன்படி அவர் தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என தனுஷ் கொஞ்சம் அப்செட்டாகியிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.
சர்ச்சை: அதேபோல் தனுஷ் மீது சமீபகாலமாகவே பலர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை வைத்துவருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தனுஷ் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.மாறாக தன்னுடைய வேலை என்னவோ அதை பற்றி மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கே.ராஜன் பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,"ராயன் படம் 100 கோடி வசூல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. படத்தை ரசிகர்கள் ஆவரேஜ் என்றே சொல்லிவருகிறார்கள். படம் இன்னும் நான் பார்க்கவில்லை. இவர்கள் மிகைப்படுத்தவே இப்படியெல்லாம்கூட சொல்லலாம். ஆனால் உண்மையில் 100 கோடி ரூபாய் என்றால் எனக்கு சந்தோஷம்தான். அதுமட்டுமின்றி தமிழிலும் வசூல் குறைவுதான். காரணம் தனுஷ் மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது" என்றார்.
பிஸி தனுஷ்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், ஆனந்த் எல்.ராயுடன் ஒரு படம், அருண் மாதேஸ்வரனுடன் படம், இளையராஜா பயோபிக் என்று ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார். அவை மட்டுமின்றி போர்தொழில் இயக்குநருடனும் ஒரு படத்தில் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











