K.Rajan - தமன்னாவைவிட இதில் ஒன்றும் மோசமில்லை.. விளாசித்தள்ளிய தயாரிப்பாளர் கே.ராஜன்
சென்னை: Ra Ra Sarasukku Ra Ra (ரா ரா சரசுக்கு ரா ரா) தமன்னாவைவிட ரா ரா சரசுக்கு ரா ரா படத்தில் மோசமாக இல்லை என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்திருக்கிறார்.
நடன இயக்குநர் கேஷவ் தெபுர் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராக அவர் பணியாற்றியிருக்கிறார். மேலும் நடன இயக்குநர்கள் பிரபுதேவா,RRR படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற 'நாட்டு நாட்டு ' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கலைஞர்கள்: இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிகேவி இசையமைக்க ஆர்.ரமேஷ் இசையமைத்திருக்கிறார். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒன்லைன். ஜெயலட்சுமி என்பவர் படத்தை தயாரித்திருக்கிறார்.
பட ரிலீஸ்: இப்படத்தில் 18 ப்ளஸ் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த சென்னை மண்டல சென்சார் அதிகாரி மொத்தம் 60 கட்டுகளை கொடுத்திருந்தார். ஆனால் அதையும் மீறி மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். இந்தப் படமானது நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் ரா ரா சரசுக்கு ரா ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குநர், "சென்சார் போர்டில் ரூல்ஸை மாற்ற வேண்டும். ஆண்ட்டி என்ற வார்த்தை தவறு என்று சொல்கிறார்கள். நக்மா என்ற பெயரை வைக்கக்கூடாது. நாகினி என்ற பெயரை வைக்கக்கூடாது என்கிறார்கள். நக்மா என்று இந்தியாவில் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்" என கோபமாக பல விஷயங்களை பேசினார்.
தயாரிப்பாளர் கே.ராஜன்: இதற்கிடையே பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "இந்தப் பட விழாவில் நான் மட்டும் கலந்துகொண்டிருப்பது பயமாக இருக்கிறது. இந்தப் படத்தின் உட்கருத்து நன்றாக இருக்கிறது. இது அடல்ட் படம். அப்படித்தான் இருக்கும். இதை ரசிக்கவும் ஆள் இருக்கிறார்கள். சரி வெற்றிகரமாக ஓடி 700 கோடி ரூபாய் வசூல் என்று கூறிய ஒரு படத்தில் (ஜெயிலர்) பெரிய ஹீரோயின் என்ன ரொம்பவே நாகரீகமாக நடித்துவிட்டார்களா.
நான் தமன்னாவைத்தான் சொல்கிறேன். அவரை விட இதில் ஒன்றும் மோசமாக நடிக்கவில்லை. ஒன்றும் தவறில்லை. எப்படியாவது போட்ட பணம் வர வேண்டும். அதற்கு கமர்ஷியலாக செய்ய வேண்டியது. இயக்குநர் கேஷவின் தைரியத்தையும் தயாரிப்பாளர் மீது வைத்திருக்கிற நம்பிக்கையையும் பாராட்டுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











