நடிகைகளின் பாவாடையை 5 இடத்துல கிழிச்சிடுறாங்க.. கவுண்டமணி பட விழாவில் கே. ராஜன் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: தயாரிப்பாளர் கே. ராஜன் இசை வெளியீட்டு விழாக்களில் பேசினாலே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பிவிடுகிறது. 85 வயதாகும் நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதில், கலந்துக் கொண்டு பேசிய கே. ராஜன் நடிகைகளின் பாவாடைகளை கிழித்து விடுவதாக பேசியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தண்டேல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சந்தீப் ரெட்டி வங்கா நடிகை சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் போட மாட்டேன் என மறுத்த நிலையில், அவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. அவரைத்தான் அந்த படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன் எனக் கூறியிருந்தார்.

k rajan goundamani otha votu muthaiya

சாய் பல்லவி போல ஒரு சில நடிகைகள் கவர்ச்சியை தவிர்த்துவிட்டு நடித்து வரும் நிலையில், பல நடிகைகள் ஆடைகளை குறைத்துக் கொண்டும் கிழித்து விட்டுக் கொண்டும் படங்களில் மட்டுமின்றி புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட உள்ளாடை தெரிய வந்து பேசுவது சமீப காலமாக அதிகரித்துள்ளதாக ரசிகர்களும் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கவுண்டமணி காமெடி கடவுள்: கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் அடைந்துக் கிடந்த போது பலரும் கவுண்டமணியின் படங்களைத்தான் வீட்டில் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் நடிகர்களையும் வாழ வைத்தவர் அவர். சமீப காலமாக சிறு பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் தான் ஓடுகின்றன. பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களை காலி செய்துவிடுகின்றன. லப்பர் பந்து, டாடா, குட் நைட் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து ஹிட் அடித்தன. அது போல கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா படமும் வெற்றி பெறும். இந்த படத்தில் இடம்பெற்ற 2 பாடல்களை பார்த்தேன் அவ்வளவு சிறப்பாக இருந்தது என்று பேசினார்.

பாவாடையை கிழித்து விடுறாங்க: அதன் பின்னர் பேசிய அவர், சமீப காலமாக படங்களில் நடிகைகளுக்கு நல்லா பெருசாவே துணி தைக்கிறாங்க. ஆனால், அதன் பின்னர், பாவாடையை 5 இடத்துல கிழித்து விடுகின்றனர். கிழித்த இடங்களில் துணி மட்டும் தெரிந்தால் பரவாயில்லை. தெரியக்கூடாதது எல்லாம் தெரிகிறது என்று சர்ச்சையை கிளப்பி தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார். நடிகர்களை விட அதிகளவில் நடிகைகளின் ஆடைகள் மட்டும் ஏன் குறைக்கப்பட்டு வருகின்றன என்கிற கேள்வியையும் அவர் முன் வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X