»   »  பியூட்டி பார்லர் வர்ஷாவும்... ஆட்டோ ஓட்டும் ராஜாஜும்..!

பியூட்டி பார்லர் வர்ஷாவும்... ஆட்டோ ஓட்டும் ராஜாஜும்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குபேரன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான சதுரன் ஒரு ஆட்டோ ஓட்டும் நாயகனுக்கும், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் நாயகிக்கும் இடையிலான காதல் கதையாம். ஆனால் வித்தியாசமான கதைக் கருவாக அமைந்திருக்கிறதாம்.

குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் சதுரன்.


வித்தியாசமான காதலைக் கையில் எடுத்திருக்கிறார்களாம் இந்தப் படத்தில்.


மூடர்கூடம் ராஜாஜ்...

மூடர்கூடம் ராஜாஜ்...

இந்த படத்தில் மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக வர்ஷா மலேத்திரியா நடித்திருக்கிறார்.


மற்றும் பலர்...

மற்றும் பலர்...

மற்றும் காளி வெங்கட், பாவாலட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜுஈஸ்வரன், கயல் தேவராஜ், கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


ஸ்லம்டாக் கேமராமேன்...

ஸ்லம்டாக் கேமராமேன்...

மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் துணை ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் செய்தி.


யுகபாரதி பாடல்...

யுகபாரதி பாடல்...

இசையை ரிஷால் சாய் கவனிக்க, பாடல்களை யுகபாரதி, முத்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங், நடனத்திற்கு தினா, நந்தா. கலையை பழனிவேல் பார்க்க, சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் கணேஷ் குமார். குபேரன் பொன்னுசாமி தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கே.ராஜீவ் பிரசாத் (இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் . ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத்தின் மகன் ஆவார்).


கதை என்ன...

கதை என்ன...

மருத்துவ துறையில் நடக்கும் முக்கியமான பிரச்னை ஒன்றுதான் இந்த படத்தின் மைய கரு. பியூட்டி பார்லரில் ஒன்றில் வேலை செய்யும் நாயகி வர்ஷா ஆட்டோ ஓட்டும் நாயகனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகி மருத்துவ ரீதியான பிரச்னை ஒன்றி மாட்டிக்கொள்கிறார். நாயகன் அவரை இந்த பிரச்னையில் இருந்து எப்படி காப்பாற்றினார் என்பது தான் படத்தின் திரைக்கதை.


நிஜமாகவே ஆட்டோ ஓட்டிய ராஜாஜ்...

நிஜமாகவே ஆட்டோ ஓட்டிய ராஜாஜ்...

இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்க நாயகன் ராஜாஜ் ஆட்டோ ஓட்ட பயிற்சி எடுத்து படப்பிடிப்பு முழுவதும் அவரே ஆட்டோ ஓட்டி நடித்தார்.


குரு போல...

குரு போல...

எனது குரு சுரேஷ்கிருஷ்ணாவை போல நானும் ஆட்டோ கதாப்பாத்திரத்தை கையிலெடுத்திருக்கிறேன். அந்த படத்தை போல் இந்த சதுரன் படமும் வெற்றிபெறும் என்று நன்பிக்கையுடன் கூறினார். வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் பட நிறுவனம் தான் இந்த படத்தை அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது


English summary
After appearing in Moodar Koodam, Rajaj plays the lead for the first time in director K. Rajeev Prasad’s Sathuran.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil