twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "சின்னக்குயில்" சித்ராவின் 52 வது பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துகள்

    By Manjula
    |

    சென்னை: பின்னணிப்பாடகி கே.எஸ்.சித்ராவின் 52 வது பிறந்த தினம் இன்று. இதையொட்டி பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

    1963 ம் வருடம் ஜூலை 27 ம் நாள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் கிருஷ்ணன் நாயர் -சாந்தகுமாரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த சித்ரா இன்று தனது 52 வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

    இசையில் பி.ஏ. பட்டப்படிப்பை பயின்ற சித்ரா அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார், இசையில் இவருக்கு குருவாக விளங்கிய கே.ஓமனக்குட்டி அவர்கள் சித்ராவிற்கு இசையில் நன்கு பயிற்சி அளித்தார்.

    என்ஜினியரும் தொழிலதிபருமான விஜயசங்கர் என்பவரைக் கரம்பிடித்த சித்ரா, திருமணத்திற்குப் பின் சென்னைக்கு வந்து இங்கேயே செட்டிலாகி விட்டார். 1979 ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 36 வருடங்களாக கூவிக் கொண்டிருக்கும் இந்தக் குயிலைப் பற்றி சுவாரசியமான சில விஷயங்களை இங்கே காணலாம்.

    பட்டங்கள்

    பட்டங்கள்

    கே.எஸ். சித்ரா சின்னக்குயில் சித்ரா மற்றும் கேரளத்திண்டே வானம்பாடி போன்ற சிறப்புப் பெயர்களால் கவுரவிக்கப்பட்டவர். சின்னக்குயில் சித்ரா பட்டிதொட்டியெங்கும் இந்தப் பெயர் பரிச்சயமாகி ரசிகர்களின் நெஞ்சில் பதிந்து விட்டது, அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் தன் குரலால் இரண்டறக் கலந்து விட்டவர் சித்ரா.

    25௦௦௦ பாடல்கள் பாடி வரலாறு

    25௦௦௦ பாடல்கள் பாடி வரலாறு

    இதுவரை 25௦௦௦ க்கும் அதிகமான பாடல்களைப் பாடி திரைத்துறையில் ஒரு வரலாறையே படைத்து விட்டார் இந்த சின்னக்குயில்.

    6 தேசிய விருதுகள் உட்பட 140 விருதுகள்

    6 தேசிய விருதுகள் உட்பட 140 விருதுகள்

    இதுவரை 6 தேசிய விருதுகள் கலைமாமணி, பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் உட்பட மொத்தம் 140 விருதுகள் வாங்கிக் குவித்து இருக்கிறார்.

    13 மொழிகளில் கூவிய குயில் இது

    13 மொழிகளில் கூவிய குயில் இது

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், துலு, ஒடியா, அஸ்ஸாமிஸ், படகா மற்றும் பெங்காலி போன்ற 13 மொழிகளில் பாடல்களைப் பாடி இருக்கிறார் சித்ரா.

    எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி ஜிப்ரான்

    எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி ஜிப்ரான்

    தமிழ் இசையமைப்பாளர்களில் எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி நேற்று வந்த ஜிப்ரான் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    100 க்கும் மேற்பட்ட

    100 க்கும் மேற்பட்ட

    பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கும் சித்ரா 100 க்கும் அதிகமான இசையமைப்பாளர்கள் மற்றும் 100 க்கும் அதிகமான பாடகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா அம்மா- சாய் சரண்

    "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா அம்மா, நீங்கள் எப்போதுமே பாராட்டப்படக்கூடிய ஒரு நபர்" என்று பாடகர் சாய்சரண் ட்விட்டரில் வாழ்த்திஇருக்கிறார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் நீங்கள் - ஆலாப் ராஜூ

    நாட்டின் பெருமிதங்களில் நீங்களும் ஒருவர், உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று பாடகர் ஆலாப் ராஜூ ட்விட்டரில் வாழ்த்தி இருக்கிறார்.

    தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் சின்னக்குயில் அவர்களுக்கு இந்த நன்னாளில் நாமும் நமது பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவோம்...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா அம்மா!

    English summary
    Playback Singer K.S.Chithra Today Celebrating, Her 52 Birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X